உரை
 
2. இலாவாண காண்டம்
 
2. கடிக்கம்பலை
 
         
     230    போர்வை மடக்கார் பொலியப் புகுதரும்
            கோயின் மகளிர் கோல மெல்லடி
            நூபுரங் கலந்த பாடகக் கம்பலும்
            அன்னவை பிறவும் பன்னூ றாயிரம்
            ஒடிவில் கம்பலை ஒருங்குதலைக் கூடிக்
     235    கடிகமழ் செல்வங் கலந்தன்றால் நகரென்,
 
        230-235 ; போர்வை மடக்கார்......கலந்தன்றால் நகரென்,
 
(பொழிப்புரை) மேலாடையை மடக்காதவராய் வந்து புகாநின்ற அரண்மனைப் பணிமகளிருடைய சிலம்பும் பாடகமும் செய்யும் ஆரவாரமும் இன்னோரன்ன பிறவுமாகிய பன்னூறாயிரம் ஆரவாரங்களும் ஒருங்குசேர்ந்து மணங்கமழும் திருமணவிழா வின்கண் கலந்து பேராரவாரமாயின அச் சயந்திநகரத்தின்கண் என்க.
 
(விளக்கம்) போர்வை மடக்கவேண்டாச் சிறப்புடைமகளிர் என்பார் போர்வை மடக்கார் என்றார். "தானை மடக்கா மான மாந்தர்" என்றார் முன்னரும் (உஞ்சை, 32 - 56.)

                   2. கடிக்கம்பலை முற்றிற்று,