உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
3. கட்டில் ஏற்றியது |
|
அறுதொழின்
முத்தீ அருந்துறை போகிய 10
மறைநவில் நாவின் மரபியல்
அந்தணன் பல்பூம்
பந்தருட் செல்வஞ்
சிறக்கும் இருநிலத்
திலக்கணம் இயற்பட
நாடி வெண்மணல்
நிரப்பங் கொளீஇக்
கண்ணுறப்.
புண்ணியப் பலாசின் கண்ணிறை சமிதை
15 முக்குழிக் கூட்டத் துட்பட
ஓக்கி ஆற்றாச்
செந்தீ அமைத்தனன்
மேற்கொள
|
|
9 - 16 : அறுதொழின் முத்தீ........அமைத்தனன்
|
|
(பொழிப்புரை) ஆறுதொழிலையுடையவனும்
அவற்றுள் வேள்வித் தொழிலின்கண் சிறப்புடையவனும், இடையறாது
வேதத்தைப்பயின்றடிப்பட்ட செந்நாவுடையவனும், இருமரபும் தூயவனும் ஆகிய
பார்ப்பனன் பூவானியற்றிய பந்தரிடத்தே செல்வம் பெருகுதற்குரிய
நல்லிலக்கணமமைந்த நிலத்தை இலக்கணத்தானே ஆராய்ந்து அந்நிலத்தில்
வெள்ளிய மணலைப்பரப்பி முக்குழியமைத்து அவற்றின்கண் சமிதைகளையிட்டு
அவியாத வேள்வித்தீயை வளர்த்து மேற்கொண்டும். என்க. |
|
(விளக்கம்) 9. அறுதொழில்;
பார்ப்பனர்க்குரிய ஓதல் ஓதுவித்தல்வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றல்
என்பன. முத்தீ; ஆகவநீயம், தெக்கணாக்கினி, காருகபத்தியம் என்பன.
அவை நாற்கோணமும் முக்கோணமும் வில்வடிவமாயும் உள்ளன
என்ப 10. மரபியல் அந்தணன் என்றது தாய் மரபும் தந்தை
மரபுமாகிய இருமரபானும் தூய அந்தணன் என்றவாறு. 12. நிரப்பம்
கொளீஇ - நிரவி; சமஞ்செய்தென்க. 14. பலாசு-புரசமரம். சமிதை -
வேள்வித்தீயிலிடும் விறகு. பலாசு முதலிய சமிதை என்க
15. முக்குழி - மூன்றாகிய வேள்வித்தீக்குழிகள்; யாககுண்டம். ஓக்கி-
செலுத்தி; போகட்டென்க. 16. ஆற்றா- அவித்தற்கியலாத. அமைத்தனன்;
முற்றெச்சம்;அமைத்தென்க.
|