|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 3. கட்டில் ஏற்றியது |  |  |  | ,,,,விசை அம்மிக் குணதிசைக் கோணத் தீடமை பீடிகை பாடுபெற 
      இருந்த
 பொன்னியி ராணி முன்வயிற் பேணிப்
 30    
      பன்னிய பனுவற் பார்ப்பன 
      முதுமகன்
 அந்தண் 
      ஆவிரை அலரும் 
      அறுகையும்
 நந்தி 
      வட்டமும் இடைஇடை வலந்த
 கோல மாலை நாற்றி 
      வானத்
 தருந்ததி 
      அரிவையோ டாணிகற் பரவும்
 35  
        பொருந்துமொழிப் புறநிலை புணர்ந்துபலர் 
      வாழ்த்தி
 நூன்முறை 
      படைத்த நான்முகக் கடவுள்
 தாண்முதல் தாணத்துத் தகைபெற 
      இரீஇப
 |  |  |  | 27 - 37 ; விசை அம்மிக் குணதிசை......தகைபெற இரீஇ |  |  |  | (பொழிப்புரை)   முற்கூறப்பட்ட 
      பார்ப்பன முதுமகன் அம்மியிடப்பட்ட கீழ்த்திசை மூலையில் 
      பெருமை யுடையதொரு மேடையின்மேல் இருந்த அயிராணிக்கு முன்னர் 
      வணங்கி ஆவிரை மலர் முதலியவற்றை யிடையிடையே வைத்துத் தொடுத்த அழகிய 
      மாலையினைத் தூக்கிஅருந்ததியையும்  வதிட்டமுனிவனையும் பொருந்து மொழிகளாலே 
      வாழ்த்தாநிற்கும் அந்தணர் பலரும் வந்நு மணமக்களைப் புறநிலையாகவும் 
      வாழ்த்தா நிற்ப, வேதவொழுக்கத்தைப் படைத்த நான்முகனுக் குரிய 
      இடத்திலே இருந்து என்க. |  |  |  | (விளக்கம்)   27. குணதிசைக் 
      கோண மென்றது வடகிழக்கு மூலையினை. 28. ஈடு-பெருமை, பீடிகை-மேடை, 
      பாடு-சிறப்பு. 30, அயிராணி-அரசாணி. 31. அந்தண் ஆவிரையலர்-அழகிய 
      குளிர்ந்தஆவிரம்பூ. அறுகை-அறுகம்புல், 32. 
      நந்திவட்டம்-நந்தியா வட்டமலர். வலந்த - கட்டிய. 33. கோல மாலை - 
      அழகிய மாலை. ஆணிகன்-வசிட்ட முனிவன் 35. பொருந்து மொழியாலே 
      அரிவையொடு ஆணிகற் பரவும் பார்ப்பனர் பலர் புறநிலை வாழ்த்தாக. 
      வாசவதத்தையை வாழ்த்தாநிற்ப என்க. வாழ்த்தி என்பதனைச் செயவெனெச்ச 
      மாக்குக. புறநிலை 
      வாழ்த்தாவது, ''வழிபடு 
      தெய்வம் நிற்புறங் 
      காப்பப்
 பழிதீர் 
      செல்வமொடு வழிவழி 
      சிறந்து
 பொலிக''
 என்று வாழ்த்துவது என்க, பார்ப்பன முதுமகன் பேணிநாற்றிப் பலர் 
      வாழ்த்தத் தகைபெற இரீஇ எனக் கூட்டுக, 37. இரீஇ-இருந்தென்க.
 | 
 |