|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 3. கட்டில் ஏற்றியது |  |  |  | பஞ்ச வாசமொடு பாகுவலத் திரீஇ அஞ்செஞ் சாந்தமொடு மஞ்சள் 
      நீவி
 இருப்பகல் 
      நிறைந்த நெருப்புநிறை சுழற்றித்
 தேவர் தூம மேவர 
      எடுப்பி
 50    மலையினீர் 
      ஆயினு மண்ணினீர் ஆயினும்
 அலைதிரைப் பௌவத் தகத்தினீர் 
      ஆயினும்
 விசும்பினீர் ஆயினும் விரும்புபு வந்துநும்
 பசும்பொன் உலகம் பற்றுவிட் 
      டொழிந்து
 குடைநிழற் றானைக் கொற்றவன் மடமகள்
 55  
        மடையமைந் துண்டு மங்கலந் தம்மென
 ஒப்பக் கூறிச் செப்புவனர் 
  அளிப்ப
 |  |  |  | 46 - 56 : பஞ்சவாசமொடு,,,செப்புவனர்அளிப்ப |  |  |  | (பொழிப்புரை)   ஐவகை 
      மணப்பொருள்களோடே வெற்றிலையையும் வலப்பக்கத்தே வைத்துச் சந்தனத்தோடே 
      மஞ்சளையும் தடவி இரும்பாற் செய்த அகலிடத்தே நிறைக்கப்பட்ட 
      நெருப்பு நிறைகளைச்சுற்றி நறும்புகை கொடுத்து, 'தேவீர் !
      நீயிர் நுமக்குரிய பசும்பொன் உலகைவிட்டு மலையிடத்திருப்பினும், அல்லது 
      நிலத்தி்டத்தே உறையினும், அல்லது கடலிடத்தே உறையினும், அல்லது 
      வானிடத்தே வதியினும், யாண்டிருப்பினும், அவற்றைவிட்டுப் 
      பிரச்சோதனமன்னன் மடமகளாகிய வாசவதத்தை நுமக்குத்தரும் இப்பலியினை 
      விரும்பி ஈண்டு வந்து இவற்றை நுகர்ந்து இவட்கு ஆக்கமளியுங்கோள்' என 
      அனைவரும் ஒருசேரக் கூறி வழங்கா நிற்ப என்க. |  |  |  | (விளக்கம்)  46. பஞ்சவாசம் 
      -'தக்கோலம் ஏலம் இலவங்கம் சாதிக்காய் கப்பூரம்' என்னுமிவை, பாகு 
      -வெற்றிலைபாக்கு. 48. நிறை: ஆகுபெயர். 48, இருப்பகலின் நிறைந்த 
      நெருப்பின்கண் மணப்பொருள்களையிட்டு நறுமணப் புகை எடுப்பி என்றவாறு, 
      49, தேவர் தூமம் - தேவர்க்கெடுக்கும் நறுமணப்புகை. 50. 
      மலையினீர் -மலையிடத்துறைவீர!் 51. பௌவம்-கடல், 52. 
      விரும்புபு-விரும்பி. 53. நுமக்குரிய பசும் பொன்னுலகத்தை விட்டு மலை முதலிய 
      இடங்களில் உறைவீராயினும் என இயைக்க, 55, மடை- கடவுட் 
      பலி.(நைவேத்தியம்) 56. தம்மென - தாருங்கோள் என்று | 
 |