|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 3. கட்டில் ஏற்றியது |  |  |  | மதியின் அன்ன வாண்முகம் பொலிய ஓடுகொடி மூக்கின் ஊடுபோழ்ந் 
      தொன்றாய்க்
 கூடுதல் 
      வலித்த கொள்கைய போலப்
 பொருது போந்துலாம் போதரித் தடங்கண்
 100   
      அமிழ்துசேர்ந் தனஅக விதழ்நாண் இறக்கமொடு
 பிறந்தஇற் பெருங்கிளை நிறைந்தொருங் 
      கீண்டப்
 பால குமரர் 
      தோள்புகன் றெடுப்ப
 நாடு 
      நகரமுங் கூடுதற் கருளி
 யாயு 
      மெந்தையுந் தீமுன் னின்று
 105   வாயிற் கூடுதல் 
      வராதிவண் வந்தென
 வலிபுணர் வதுவைக்குச் சுளியுநள் போல
 நடத்தல் தேற்றா மடத்தகை மாதரை
 |  |  |  | 96 - 107 ; மதியின் அன்ன.......மடத்தகை 
      மாதரை |  |  |  | (பொழிப்புரை)  திங்கள் போன்று 
      ஒளிவிடும் முகம்பொலிய இருந்து ஒழுகினாற் போன்று நீண்ட மூக்கினூடே 
      பிளந்து ஒன்றனை ஒன்று கூடும் கோட்பாடுடையன போன்று ஒன்றனை ஒன்று- பொருது 
      வந்து உலாவா நிற்பனவும் தாமரைப்போதினை ஒப்பனவும் அத்தாமரையின் 
      அகவிதழ் நாணுதற்குக் காரணமான மென்மையினை உடையனவும்,
      அமிழ்தத்தைப்பெய்து வைத்தாற்போன்ற அருள் நிரம்பப் பெற்றனவும்,
      அகன்றனவும் செவ்வரி கருவரி யோடியனவும் ஆகிய கண்கனையுடைய வளும், தான் 
      பிறந்த இல்லத்திற்குரிய சுற்றத்தார் வந்து நிறையவும் பால குமாார் 
      விரும்பி மைத்துனமுறைமை காரணமாக உதயணன் தோள்மாலையை எடுத்துத் 
      தந்தோளிலே புனையா நிற்பவும் நாட்டிலுள்ளோரும் நகரப்பெரு மக்களும் வந்து 
      கூடும்படி அருள் செய்து தன் தாயுந் தந்தையும் தீ முன்னர் நின்று நீருடன் 
      கொடுப்பவும், கூடுதல் நிகழும்படி வாராமல் இவ்வதுவை இங்ஙனே இவ்விடத்தே 
      வந்தது என்று கருதி வலிதாகக்- கைபற்றிப் புணர் தற்கிடமான இவ் வதுவைக்கு 
      உடன்படாமல் சினப்பவள் போன்று தாழ்ச்சி யோடே நடக்க அறியாமல் தடுமாறி 
      நடக்கின்றவளுமாகிய வாசவதத்தையை என்க |  |  |  | (விளக்கம்)  96,, மதியின் 
      அன்ன - திங்களைப்போன்ற ; முகம் பொலிய இருந்து என்க, 97,  
      ''ஒழுகு பொற்கொடி மூக்கும் உருப் பசியை உருக்குமே'' என்றார் தேவரும் 
      (சீவக, 165)
 98. ஊடு போழ்ந்து - ஊடே துளைத்து.
 99. 
      போது-தாமரைமலர்,
 100. அமிழ்தம் - அருளுக்கு உவமை. அத்தாமரையின் 
      அகவிதழ் நாணுதற்குக் காரணமான மென்மை யையும் என்க. இறக்கம்- தளர்ச்சி,
 101, பிறந்தஇல் - தான் பிறந்த பிரச் சோதனன் இல்லம்.
 102. பாலகுமரர்-பிரச்சோதனன் மக்கள்,.பாலகுமாரர் புகன்று தோள்
      எடுப்ப என மாறுக. புகன்று-விரும்பி. தோள் எடுப்ப என்றது மைத்துனர் மணமகன் 
      தோளிற்றந்தோள் மாலையை எடுத்தணிதலாகியதொரு சடங்கி னைச் செய்ய 
      என்றவாறு,
 104. என் தாயுந்தந் தையும் தீமுன்னர் நின்று நீருடன் 
      அளித்தல் வாயிலாய் வாராமல் இம்மணம் இங்ஙனம் வலிதிற்பற்றிப் புணரும் 
      மணமாய் வந்தது என்று அதற்கு உடன்படாது சினப்பவள் போன்று
      தடுமாறி நடப்பவளாகிய வாசவதத்தையை என்க
 106. வலி புணர் வதுவை 
      -வலிந்து பற்றிச் செய்யும் திருமணம். சுளியுநள் - சினப்பவள். நாணத்தாலே 
      நடக்கமாட்டாதாட்குக் கவி ஒருகாரணம் கற்பித்தபடியாம். மாதர் ; 
      வாசவதத்தை.
 | 
 |