|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 3. கட்டில் ஏற்றியது | | வளைபொலி முன்கை வருந்தப் பற்றித்
தளையவிழ் தாரோன் வலமுறை
வந்து 110 மறுவில் காதன்
மக்களைப் பெறுகென
முறைமையிற் பிழையாது முகிழ்வி்ரல் பற்றித்
தகாஅக் காலந் தலைவரும்
எனினும் பகாஅக் காதலொடு
பத்திமை,, ,,,,,,,,,
செஞ்சுடர் போன்ற அங்குலி நுழையா
115 வெஞ்சுடர் வீரன் நெஞ்சு முதல்
நீவித் தென்மருங்கு
மடுத்த தீர்த்தப் புன்மிசை
மென்மரங் கெழிலியை மெல்லென
நடாஅப் வதுவைத் தானம்
பொதுவந் தொன்றி அந்த
ணாளர்ஆசிடை கூற
| | 108 - 119 ; வளைபொலி முன்கை......ஆசிடை
கூற
| | (பொழிப்புரை) தாரோனாகிய
உதயணன் அவள் வருந்தும்படி முன்கையிடத்தே பற்றித் தீயினை முறையாக
வலம்வந்து குற்றமற்ற நன்மக்களைப் பெறுவாயாக என்று கூறிப்
பின்னர் அவளது விரலைப்பற்றி அல்லற் காலம் வந்துழியும் மாறாத
காதலோடே...,.சிவந்த சுடரை ஒத்த தனது விரலை அவள்
நெஞ்சிடத்தே நுழைத்துத் தடவித் தென்றிசைக் கண்ணே பரப்பிய தருப்பைங
புல்லின்மேலே அவ்வாசவதத்தையை மெல்ல நடத்திச்சென்று, அவையிடத்தே
மணத்தவிசின்மேல் வந்து அமராநிற்ப அந்தணர் வாழ்த்த என்க.
| | (விளக்கம்) 109 .
தாரோன்;.உதயணன். தீயினைவலமுறை வந்தென்க.110. மறுவில் காதல்-
குற்றமற்ற மெய்யன்பு. 111. முகிழ் - காந்தளரும்பு. 112. தகா அக்
காலம்- துன்பமுறுங் காலம். 113.. பகாக் காதல்-மாறாத அன்பு.
114. அங்குலி-விரல்.மணமகன் தன் விரலாலே மணமகள் நெஞ்சினைத் தடவுதல்ஒரு
சடங்கென்க. 115. வெஞ்சுடர் -ஞாயிறு.ஞாயிற்றை ஒத்த உதயணன் என்க.116.
தீர்த்தப்புல் -தூய தருப்பை.117.எழிலி-அழகி நடாஅய் - நடத்தி.
பொது -அவை, 119. ஆசிடை- வாழ்த்து
|
|