உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
4. ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது |
|
5 முதுநீர்ப்
பொழிலுகந் தெதிரின்
றோதப் பதினா றாயிரம்
பதினறு வகைய சுருக்க
மின்றிச் குழ்ந்துடன்
திரியாப் பெருக்கத்
தானைப் பிரச்சோ தனற்குப்ப்
|
|
( பிரச்சோதனண் மாண்பு ) 5 - 8
; முதுநீர்..,....பிரச்சோதனற்கு
|
|
(பொழிப்புரை) கடல் சூழ்ந்த
இவ்வுலகத்தின்கண் உள்ள வேந்தருள் வைத்துத் தனக்கு நிகராகும் அரசர்
பிறர் இல்லாத படி உயர்ந்து தனது புகழை உலகம் கூறாநிற்பப் பதினாறாயிரம்
என்னும் எண்ணளவுடைய பதினாறு வகையினவாகிய செல்வப் பேற்றானும்
குறைவு இன்றிப் பகைவரூரை முற்றிப் போர் செய்துழி அப்போரிடைப்
பிறக்கிடாத தன்மையுடைய படையினையும் உடைய பிரச்சோதன
|
|
(விளக்கம்) 5. முதுநீர்-கடல் பொழில்-
உலகம.் உகந்து - உயர்ந்து பொழிலின்கண் தனக்கெதிரின்று உகந்து என மாறுக.
எதிரின்று என்புழி இன்றி என்னும் வினையெச்சத்தீறு
உகரமாயிற்று. 6. பதினாறாயிரம் பதினறு வகைய என்றது,
பதினாறாயிரம் என்னும் எண்ணளவுடைய பதினாறு வகைச் செல்வங்கள் என்றவாறு.
அவை பதினாறாயிரம் நாடும், பதினாறாயிரம் தேவியரும் முதலியன.
வகைய ; பலவறி சொல் . வகைச் செல்வங்களானும் குறையின்றி
என்க. 7. சூழ்ந்து - பகைவரூரை முற்றி. சூழ்ந்து உடன்று
இரியாத்தானை எனக் கண்ணழித்துக் கூறுக. இனித் தன்னைச் சூழ்ந்து
தன்னோடு திரியும் தானை எனினுமாம் 8.
பிரச்சோதனனுக்கு என்பது தேவியர் என 20ஆம் அடிக். கட்
சென்றியையும்,
|