உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
4. ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது |
|
கோவீற் றிருப்புழிப் பூவீற்
றிருந்த
திருமகள் போல ஒருமையின்
ஒட்டி
உடன்முடி கவித்த கடனறி
கற்பின்
இயற்பெருந் தேவி வயிற்றகத் தியன்ற
25 வட்டப் பெரும்பூண் வாசவ
தத்தையொடு
கட்டி லேற்றங் கடந்த பின்னர்
|
|
(கோப்பெருந் தேவியின் மாண்பு) 21 - 26 ;
கோவீற் றிருப்புழிப்,,,,,,,கடந்த பின்னர்.
|
|
(பொழிப்புரை) திருமுடிசூட்டுதற்
பொருட்டுப் பிரச்சோதன மன்னன் அரசு கட்டிலில் வீற்றிருந்த பொழுது
அவனோடு திருமகள் ஒன்றுபட்டு வீற்றிருந்தாற் போன்று தானும் ஒருசேர
இருந்து திருமுடி சூட்டப்பட்டவளும் கற்பு மிக்கவளும் ஆகிய.
கோப்பெருந்தேவியின் வயிற்றிற் பிறந்த வாசவதத்தையோடே பள்ளிக்
கட்டிலேறு தலாகிய சடங்கு நிகழ்ந்த பின்னர் என்க.
|
|
(விளக்கம்) (4) வத்தவரிறைவன்
வாசவதத்தையோடு கட்டிலேறுதல் நிகழ்ந்தபின்பு என இயைத்துக்
கொள்க. 21. கோபிரச்சோதனன். வீற்றிருப்புழி-என்றது
முடிபுனை தற்பொருட்டு அரசுகட்டிலில் அமர்ந்திருந்த பொழுது
என்றவாறு. 22. அவனோடு திருமகள் வீற்றிருந்தாற்போலத்
தானும் ஒன்றி வீற்றிருந்து முடிகவிக்கப் பெற்ற
என்க. 25, பெரும்பூண்-பேரணிகலன்.
|