|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 4. ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது | | உயர்ந்த நண்பின் உருமண் ணுவாவும்
வயந்தக குமரனும் வத்தவர்க்
கியற்றிய ..,.,....ாளங்
கழிந்து மூதூர் வாயிற்
30 றம்பெயர் நிறீஇய மன்பெரு
மாந்தரும் நிறையோம்
பொழுக்கத்து மறையோம் பாளரும்
பன்னகர் தோறு மன்னவன்
வேண்ட முனைவர்
வகுத்த புனைபூண் அகலத்துக்
காழகத் தொன்னூற் கருதுநெறி
நுனித்ததன் 35 ஆழமைக்
கடங்கா அமைவரு காட்சி
அரும்பொருள் உணரும் பெருங்கணிச்
சங்கமும்
திணைகளுங் கணக்கரும் இனையவர் மொய்த்து
| |
(மயிர்கல்யாணப் பந்தரின்
மாண்பு)
27 - 37 ; உயர்ந்த........மொய்த்து்னர்.
| | (பொழிப்புரை) உருமண்னுவாவும்
வயந்தககுமரனும் இவ்வண்ணமாக உதயணனுக்குச் செய்த.......,கழிந்து
சயந்தியின்கண் அவ்வுருமண்ணுவா விரும்பி அழைத்தலானே அரசவைச்
சுற்றத்தாரும் அந்தணரும் பெரிய கணிவர் குழாமும் திணைமாந்தரும் கணக்கரும்
இவர்போல்வார் பிறரும் வந்து கூடி என்க,
| | (விளக்கம்) 27, உதயணன் உயிர்
நண்பர்கள் நால்வர்களுள் உருமண்ணுவாவும் வயந்தக்குமரனும் இருவர்
ஆதலின் 'உயர்ந்த நண்பின்' என்றார். 29. மூதூர் - சயந்தி. தமது
ஒழுக்கத்தானே தமது புகழை உலகில் நிலைக்கச் செய்த மன்பெரு மாந்தர்
என்க, அவர் அரசன் சுற்றத்தார் என்க, 32. உருமண்ணுவாவிற்குரிய பல
நகரங்களினும் வாழும் பெருங்கணிச் சங்கம் என்க. உருமண்ணுவா உதயணன்
அமைச்சனாயினும் சயந்தி முதலிய நகரங்கட்கு அரசுரிமை பூண்டு நிற்றலான்,
''மன்னவன்'' என்றார். 33- 'முனைவர் வகுத்த தொன்னூல்' எனக் கூட்டுக.
34. காழகம்-ஆடை. 34-6; நூல் கருதியவழி ஆராய்ந்து அந்நூலின் ஆழ்ந்த
தன்மைக்கட்பட்டடங்காமல் மேலும் இடையறாது ஆராய்கின்ற காட்சியாலே நூல்
காட்ட,ாத அரிய பொருள்களையும் உணரும் நுண்மாணுழைபுல முடைய
பெருங்கணிகள் என்க. 35. ஆழமை-- ஆழ்ந்த தன்மை. 37.
திணைகள் -அரசியலில் உத்தியோகம் வகிப்போர், மொய்த்து -
நெருங்கி.
|
|