உரை
 
2. இலாவாண காண்டம்
 
4. ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது
 
          கலாஅய்க் கிடந்து கவ்விய கொழுந்தின்
         வள்ளியு மலருங் கொள்வழிக் கொளீஇ
   85    வலமுறை வகுத்த நலமுறை நன்னகர்
 
        83 - 85; கலாஅய்.....,நன்னகர்
 
(பொழிப்புரை) ஒன்றனொடு ஒன்று பிணங்கிக் கிடந்து ஒன்றனை ஒன்று சுற்றிய கொழுந்தினையுடைய பூங்கொடியுருவங்களையும் மலர் உருவங்களையும் ஏற்புழி வலஞ்சுற்று  முறையாக எழுதி இயற்றப்பட்டு அழகு குடியிராநின்ற நல்ல மணவறையிடத்தே என்க.்க..
 
(விளக்கம்) 83. கலாஅய்-பிணங்கி ; பின்னி என்றவாறு.
    84. வள்ளி-பூங்கொடி.
    85. நலம்-அழகு. நன்னகர் என்றது மணவறையை.