|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 4. ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது | | மருப்புக்கை அமைத்து வாய்முதல் தோறும்
உருக்குறு தமனியத் தொழுகுகொடி
யோட்டிப் 110 பவழக்
கொட்டைப் பல்வினை நுனித்த
திகழணிச் செருப்பிற் சேவடி
இழிந்து கடவுட் டானம்
வலமுறை வந்தபின்
அடர்பொன் திருநகர் அறியக் காட்டி
நிலத்துமிசை இழிந்த நிகரில்
நெடுமுடி 115 நலத்தகை இந்திரன்
எழிற்பொலி வொப்ப
இலக்கண இருக்கை திருத்திய பின்றை
| | 104 - 116; குறைவின்று,,,.,,பின்றை
| | (பொழிப்புரை) இங்ஙனமாகச்
செய்முறையானே சிறிதும் குறைவின்றி அமைந்த அழகு நுட்பமும் கடவுட்டன்மையும்
உடைய மணவறையினை மங்கல அணிகலன்களையுடைய உதயணகுமரன்
தன்னோடொத்த சிறப்பினையுடைய மன்னர் மக்களோடே பகைமன்னர்
ஊர்ந்துவந்த களிற்றியானையின் மருப்பாலே பக்கங்களை அமைத்து இடந்தோறும்
உருக்கிய பொன்னாலே பூங்கொடியுருவங்கள் அமைத்துப் பவழத்தாலே
குமிழ் அமைக்கப்பட்ட செருப்பினின்றும் இழிந்து வலமாக வந்தபின்பு
ஆண்டுள்ள சான்றோர் அந்த மணவில்லத்தின் அழகெல்லாம் அவன் உணரும்படி
காட்டித் திருவோலக்கத்தில் அரசிருக்கும் இந்திரன்போற் பொலிந்து
தோன்றும்படி அம்மங்கலமணையின்கண் திருத்தமுற இருத்தியபின்னர்
என்க.
| | (விளக்கம்) 104
கோலநுட்பத்துக் (112) கடவுட்டானம் என இயைக்க. இனி, குறைவின்றி அமைந்த
கோலநுட்பத்தினையுடைய மங்கலப் பேரணி எனினுமாம். இங்ஙனம் கூறின் 103
செஞ்சுடர். மாட்டி அணிசெய்யப்பட்ட கடவுட்டானம் எனச் சில சொற்பெய்து
முடித்துக்கொள்க. குறைவின்று என்புழி இன்றி என்னும் வினை
யெச்சத்தீற்று இகரம் உகரமாய்த் திரிந்தது, செய்யுளாகலின்.
105 மறுவின்று என்பதும் அது. மறு - குற்றம்.
மங்கலப்பேரணி - மங்கல நாட்களிலே அணியும் சிறப்பணிகலன்.
104 தன்னோர் -தன்னனையோர் என்பதுபட நின்றது; இனித்தமர்
எனினுமாம், 107. உருத்தமன்னர் - பகையரசர், ஊர்ச்சி -
ஊர்தல். ஊர்தியுமாம். 108. மருப்பினால் கை அமைத்து என்க -
கை என்றது பக்கத்து விளிம்புகளை. வாய்-இடம், 109, ஒழுகுகொடி - ஓடாநின்ற
பூங்கொடியுருவம். 110. கொட்டை-குமிழ். இங்ஙனமாகப் பல
அணித்தொழில்களும் இயற்றப்பட்ட செருப்பென்க. 111. செருப்பு - மிதியடி.
சேவடி யிழிந்தென்பது முதல்வினை சினைமேனின்றது. 113.
அடர்பொன் - தகடாகிய பொன்.. 114. இலக்கணம் அமைந்த
மணத்தவிசென்க. பின்றை - பின்பு.
|
|