|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 4. ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது |  |  |  | அடிவினைக் 
      கம்மியர் வெடிபட அடுக்கிய உயர்நலக் கோலத் தொள்ளொளி திகழ
 185   
      வகையமை கொல்லியின் வசையறத் 
      துடைத்துச்
 சேவடிக் 
      கேற்பச் செழுமதிப் 
      பாகென
 வாருகிர் 
      குறைத்து வனப்புவீற் 
      றிரீஇய
 ஒண்ணிறக் 
      கல்லின் நன்னிறம் பெறீஇ
 விரலிற் கொண்ட வெண்ணிற நுண்டாது
 190   
      விரிகதிர் மதியின் விளங்கொளி 
      அழிப்ப
 நிறம்பெற 
      உரிஞ்சி நேர்துகில் 
      துடைத்தும்
 தண்டா மரையின் 
      அகவிதழ் போலப்
 பண்டே 
      சிவந்த படிய 
      வாயினும்
 கண்டோர் 
      மருளக் கைவளங் காட்டி
 195   அரத்தப் பஞ்சின் 
      அணிநிறங் கொளீஇப்
 பரப்பும் விதிர்ப்பும் பருப்பும் 
      இன்றி
 அணித்தலைச் 
      சார்ங்கம் அணிபெற எழுதி
 இருவகைக் கம்மம் உருவெளி திகழ
 |  |  |  | 183 - 199; 
      அடிவினைக் கம்மியர்.,..முடித்த பின்றை |  |  |  | (பொழிப்புரை)  ஓசையுண்டாக 
      அடிக்குந் தொழிலையுடைய கம்மியர் செய்த பலவாக அடுக்கப்பட்ட உயர்ந்த 
      அழகுடைய தலைக்கோல முதலிய அணிகலன்கள் ஒள்ளிய ஒளியுடனே
      திகழும்படி கொல்லியினாலே மாசறத் துடைத்தும், சிவந்த அடியின் 
      அழகுக்கேற்பப் பாதித் திங்கள்போல நகத்தினைக் குறைத்தும், அழகும் 
      நிறமுமுடைய  கல்லினாலே நல்ல நிறம் பெறும்படி தேய்த்தும் விரலிலே 
      எடுத்துக்கொண்டுட வெள்ளிய, நுண்ணிய மணப்பொடியினை முகத்திற்றடவித் 
      திங்கள் ஒளியினும் மிக ஒளிபெறும்படி நிறமுண்டாகத் தேய்த்தும் பினனர் 
      நேரிய துகிலானே துடைத்தும், இயல்பாகவே தாமரையின் அகவிதழ்
      போன்று சிவந்துள்ளனவாயினும் மேலும் கண்டோர் வியக்கும்படி தமது 
      ஒப்பனைத்திறத்தானே செம்பஞ்சியினாலே அழகிய நிறமூட்டியும் பரப்பு முதலிய 
      குற்றமில்லாதபடி வில் முதலிய வடிவினவாகிய தொய்யில் எழுதியும் இவ்வாறாக 
      உறுப்புக்களைத் திருத்துதலும் கோலஞ்செய்தலுமாகிய  இருவகைத் 
      தொழிலானும் அத்தொழில்வல்லோர் செய்து முடித்த பின்னர் 
  என்க, |  |  |  | (விளக்கம்)  183, 
      வெடிபட அடிவினைக் கம்மியர் என மாறுக. கோலம் : ஆகுபெயர் ; தலைக்கோல 
      முதலிய அணிகலன் என்க. அவை அடுக்கிச் செய்யப்படுவன ஆதலால் அடுக்கிய 
      கோலம் என்றார். 185. கொல்லி - துணி ; 
      அணிகலன்களை மாசுநீக்குமொரு கருவி. வசை -அழுக்கு.
 186 
      மதிப்பாகு - பாதித் திங்கள், மதியின் கூறாகிய பிறைத் திங்களுமாம்.
 187, இரீஇய - இருந்த.
 191, 
      உரிஞ்சி - தேய்த்து,
 195. அரத்தப் பஞ்சி - 
      செம்பஞ்சி.
 196. பரப்பு முதலியன 
      குற்றங்கள்
 197, சார்ங்கம் - 
      வில்.
 198. உறுப்புக்களைத் திருத்துதலும் புனைதலுமாகிய இருவகை 
      ஒப்பனைத் தொழிலும் என்க.
 | 
 |