|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 5. மண்ணூநீராட்டியது | |
படுகண் முழவொடு பல்லி்யங்
கறங்க ஏம
முரசம் இழுமெனச் சிலைப்பக்
காமர் சங்கம் வாய்வதின்
முழங்க 20 வரித்த பூங்கொடி
விரித்துவிசும் பிவரப்
பத்திரப் படாகை பலவயின்
நுடங்கச் சாதிங்
குலிகமொடு சமரம்
ஒழுகிய
மேதகு முளைக்காற் கோதை துயல்வரக்
குத்துமுளை செறித்த வித்தக
விதானத்துத்
| | 17 -
24 ; படுகண்.....,.,விதானத்து
| | (பொழிப்புரை) மத்தளமுதலிய
இன்னிசைக்கருவிகள் முழங்காநிற்பவும், காவல் முரசம் இழுமென முழங்கவும்,
சங்கம் முழங்கவும், அழகிய கொடிகள் வானிடத்தே
விரிந்து ஆடா நிற்பவும், மங்கலக் கொடிகள் ஆடாநிற்பவும், செவ்வரக்கானே
நிறமூட்டப்பட்டுச் சாமரைபோன்று தூங்காநின்ற முளைகளையுடைய கூலமாலைகள்
அசையவும் குத்துக்காலிடத்தே செருகப்பட்ட சித்திரத் தொழினலமமைந்த
குளிரந்தநடைபபந்தரின் கீழே என்க. | | (விளக்கம்) 17.
படுதல்.-தோன்றுதல். இசைதோன்றுதற் கிடமான கண்ணையுடைய முழவம்
என்க. பல்லியம் - பலவாகிய இசைக் கருவிகள். கறங்க - முழங்க. 18.
ஏமம்-காவல்; இன்பமுமாம். இழும்;ஒலிக்குறிப்பு.. சிலைத்தல் - முழங்குதல்.
19. காமர்-அழகு. வாய்வதின் - வாய்ப்புடையதாக.
20. வரித்த-சித்திரமெழுதப்பட்ட. இவர-அசைய. 21 - பத்திரப் படாகை -
மங்கலக்கொடி. பலவயின் - பலவிடத்தும். 22. சாதிங்குலிகம்-சாதிலிங்கம்.
சமரம் - சாமரை; இது. நெல் முதலியவற்றின் கதிர்க். குஞ்சங்கட்கு உவமை.
தூக்கிச்செல்ல வேண்டு தலானே குத்துக் காலிற் செருகப்பட்ட விதானம். இஃது
இயங்கும் பந்தர்; இதனை நடைக் காவணம் என்றும் கூறுப. தண்ணெழில்
விதானத்து நடுவண் எனமாறுக.
|
|