|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 5. மண்ணூநீராட்டியது | | மருப்புநிலைக் கந்தின் இருப்பெழுப்
போக்கி வயவர்
காக்கும் வாயிற் செல்வமொடு 40 கயவர்
துன்னாக் கட்டிற் றாகிப்
படையமை இட்டிகைப் படாமைப்
படுகால் இடமமைத்
தியற்றிய ஏந்துநிலைக் கோணத்துக்
கழறுகால் அமைத்த கட்கின்
வாவியுள்
| | (மங்கல நீர்க் குளத்தின்
மாண்பு) 38 - 43 ;
மருப்புநிலைக்,,,,.,,,வாவியுள்
| | (பொழிப்புரை) யானை மருப்பினாலே
தூண் இயற்றி அத்தூணின்கண் இரும்பினாலே ஏழுமரங்களமைத்து
மறவராலே காக்கப்படுகின்ற வாயிலையுடைத்தாய்க் கயவர்கள் எஞ்ஞான்றும்
அணுகவியலாத காவலையுடைத்தாய்ச் செங்கல் படுக்கப்பட்ட படித்துறைகள்
இயற்றி உயர்ந்த நிலைகனையுடைய அவற்றின் கோணங்ளிலே இடிந்துரை பொறித்த
கம்பங்களையுடைத்தாய்க் காண்போர் கண்ணுக்கினிய அழகிய குளத்தின்கண்
என்க. | | (விளக்கம்) 38.
மருப்பு- யானையின் எயிறு, கந்து.- தூண், எழு-தடைமரம். அகத்தே
நுழையுங்காலத்து மேலே எழுப்பப்படுதலால் எழு என்பது பெயராயிற்று.
'சீப்புள்ளுறுத்துத் திண்ணெழுப் போக்கி ' என்றார் (1-43:
193.) உஞ்சைக்காண்டத்தும், 'எழுவுஞ் சீப்பும் முழுவிறல் கணையமும்'
என்றார் இளங்கோவடிகளாரும். (சிலப். 15;215.) 39, வாயிற்
செல்வம்-வாயிலாகிய செல்வம் என்க. அக்குளத்தின் நலத்திற் கேதுவாதல்
பற்றிச் செல்வம் எனப்பட்ட.து. 40. கயவர்-நன்மை தீமை
வகுத்துணராது வேண்டியாங்கு. வேண்டியாங் கொழுகும் கீழ்மக்கள்.துன்னா-அணுகாத,
கட்டிற்று- காவலையுடையது. 41. படை-அடுக்கு.
இட்டிகை-செங்கல். பாடு-தளம்படுத்தல். படுகாலிடம் - படித்துறையிடம்.
கோணம்-அப்படித்துறை, மூலைகளில். 43.
கழறுகால்-இக்குளத்தின் நீரை மசுப்படுத்துவோர் இத்தண்டனை எய்துவர்
என்றாற்போன்ற இடித்துரைகளாலே அச்சுறுத்து மொழிகள் பொறித்து நிறுத்தப்பட்ட
தூண்கள் என்க. 'காப்புற வகுத்த கன்னியங்
கடிமனை யாப்புற வகுத்த போர்ப்பெருங்கோணத்துக் கழறுகால் அமைத்து'
என்றார் உஞ்சைக் காண்டத்தும் (1 - 41, 266 -
268,) 43. கட்கின் வாவி-கண்ணுக்கு இனிய குளம்.
|
|