உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
5. மண்ணூநீராட்டியது |
|
50 தேங்கமழ்
நறுநீர் திறவதின் பற்றிப்
பணைமுர சியம்பும் படைப்பெரு
முற்றத்துத்
துணைநலத் தோழர் துன்னினர் சூழா
மண்ணுநீர் ஆட்டின் மலைந்தனர்
ஆகி வண்ண மணியும்
வயிரமு முத்தும் 55 இட்டன
கொள்ளும் முட்டிலர்
ஆதலின் வான
மீனின் வயின்வயின்
இமைக்கும்
தானந் தோறுந் தகைபெறக் குழீஇ
வித்தகர் வரித்த சித்திர
நகர்வயிற்
பொற்பெரும் படுமணை முத்தொடு விரவிச் 60
சாலியும் உழந்துங் கால்வழிப் பரப்பிப்
பாஅய் அமைந்த பின்றைச்
சேஎய்
|
|
50 - 61 : திறவதின்.........பின்றை
|
|
(பொழிப்புரை) உதயணகுமரனுடைய
தோழர் முரசமுழங்காநின்ற பெருமுற்றத்திடத்தே இந்
நீராட்டுவிழாவின்கண் வினை செய்தற்கண் ஒருவரின்
ஒருவர் மாறுபட்டவராய் வந்து குழுமி இடப்பட்ட மாணிக்கமணி
முதலியன இரப்போரிலாமையானே இடந்தோறும் கிடந்து நாண்மீன்
போன்று விளங்காநின்ற ஓவியம் பொறித்ததொரு மண்டபத்தின்கண் முத்து
முதலியவற்றைக் கீழே பரப்பி அவற்றின் மேலாய்ப்
பொன்னடையிட்டுப் பரப்பி முடித்தபின்னர் என்க.
|
|
(விளக்கம்) 50.தேங்கமழ்
நறுநீர்க் குடத்தைத் தோழர் படைப் பெருமுற்றத்தே தம்முள் மாறுபட்டுப்
பற்றி வித்தகர் வரித்த மணிமுதலியன இமைக்கும் சித்திரநகர்வயின் முத்து
முதலியவற்றைப் பரப்பி அவற்றின்மேலே மணையிட்டுப் பரப்பிவைத்த பின்னர்
என்றியைபு காண்க. 51. படைப்பெருமுற்றம் என்றது அரண்மனை
வாயிலை. 52. துணைநலத் தோழர் -
உற்றுழி, உடுகையிழந்தவன் கைபோன்று உதவும்
நலமிக்க மெய்நட்பினர் என்க. பணிமாக்களிருப்பவும்
தோழர்களே இத் தொழில்களை உதயணன் நீராட்டு விழாவின் கண்
விருப்பமுடையராய்ச் செய்யாநிற்ப என்பது கருத்து. 53,
ஒருவர் செய்யத் தொடங்கியதனை அவரை விலக்கித்
தாம் தாம் செய்ய முன்வருதலானே மலைந்தனராகி
என்றார்.மலைதல்-மாறுபடுதல் 54. வண்ணமணி என்றது நிறமிக்க
மாணிக்கமணியை.
55. இட்டன கொள்ளும் முட்டு
இலர்-அந்நாட்டுமக்கள் பிறர் போகட்ட பொருளை எடுத்துக் கொள்ளுதற்குக்
காரணமான வறுமையிலர் ஆகலின் மணி முதலியன இட்டவிடத்தேயே கிடந்து
இமைத்தற் கிடமான சித்திரநகர் என்க 58. வித்தகர் சூழ்ந்து
தானந்தோறும் தகைபெற வரித்த சித்திரங்களையுடைய நகர் என்றியைபு
காண்க. சித்திரநகர் என்றது மங்கல நீராட்டு
மண்டபத்தை 60.கால்வழி-அடியின்கண். மணையிட்டு
அவற்றின்மேல் முத்து முதலியவற்றைப் பரப்பி அவற்றின்மேல் குடங்களைப்
பரப்பி வைத்த பின்னர் என்றவாறு. பாய் - பரப்பி,
|