|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 5. மண்ணூநீராட்டியது | |
பாஅய் அமைந்த பின்றைச் சேஎய்
செல்வியிற் சேர்ந்து சிறப்பொடு
வணங்கி எவ்வழி
யோரும் ஏத்தினர் எதிர்கொள
அவ்வழி இரீஇய பின்றை
மெய்பெறச் ்
| | 61 - 64 ; சேஎய்ச்
செவ்வியிற்,,,,,,,,இரீஇய பின்றை
| | (பொழிப்புரை) முருகனை ஒத்த
உதயணகுமரன்ஆண்டுள்ள ஏத்திறத்தாரும் தன்னைக் கைகூப்பி வணங்கி
எதிர்கொள்ளும் படியாக அச் சித்திரநகரின்கட் சென்று இருந்தபின்னர்
என்க.
| | (விளக்கம்) 61, சேஎய்;
உவம ஆகுபெயர்; உதயணகுமரன். 62. செவ்வி. ஆண்டுச்
செல்லவேண்டிய அமயம், 63, எவ்வழியோரும் -
எத்திறத்தோரும்; என்றது ஐம்பெருங்குழு முதலிய பலவகைப்பட்ட மாந்தரும்
என்றவாறு. ஏத்தினர். முற்றெச்சம். வணங்கி ஏத்தி எதிர்கொள
என்க. 64 அவ்வழி-அவ்விடம்; அச்சித்திர
நகரின்கண்.
|
|