|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 5. மண்ணூநீராட்டியது |  |  |  | நெய்தலைப் பெய்த பின்றை மெய்வயின் மென்மையு நேயமு நன்மையு 
      நாற்றமும்
 ஒருநாட் பூசினும் ஓரியாண்டு விடாஅத்
 திருமாண் உறுப்பிற்குச் சீர்நிறை 
      அமைத்துக்
 100      கரும வித்தகர் 
      கைபுனைந் தியற்றிய
 வாச வெண்ணெய் பூசினர் போற்றி
 நூல்வழி நுனித்த நுழைநுண் 
      ணுணர்வினர்
 நால்வகைக் கோலத்து நால்வகை 
      மாக்கள்
 தாமரை 
      மூய தமனியக் குடநீர்
 105      தாமுறை 
      சொரிந்துதம் முறைமையின் ஆட்டிச்
 |  |  |  | 96 - 105 ;  
      மெய்வயின்,,,,,,,,முறைமையின் ஆட்டி |  |  |  | (பொழிப்புரை)  மணப்பொருள்கூட்டுந்தொழிற்றிறமுடைய வாதிகரானே செப்பஞ்செய்து 
      உறுப்புகளிலே பூசுதற்பொருட்டுச் சீர்செய்து நிறுத்துச் சரக்குகளை அமைத்து 
      இயற்றப்பட்டதும் ஒருநாள் பூசியவிடத்தும் ஓரியாண்டு விடாது கமழ்வதும் 
      மென்மை முதலிய பண்புகளையுடையதுமாகிய வாசவெண்ணெயை மெய்யின்கண் பேணிப் 
      பூசி, நூல்களை ஓதி நுணுகிய .உணர்வினையுடையரும் நால்வேறு
      வகையாக ஒப்பனைசெய்து கொண்டோருமாகிய சான்றோர் நால்வர், தாமரை 
      மலரானே மூடப்பட்டிருந்து பொற்குடத்தை எடுத்து அவற்றின்கண். உள்ள 
      நீரைப்பெய்து நூன்முறைப்படி ஆட்டா  நிற்ப என்க |  |  |  | (விளக்கம்)  97. நேயம்- 
      நெய்ப்பு. நன்மை-ஈண்டுத்தண்மைப் பண்பின் மேற்று. 
      நாற்றம்-மணம், 98. ஒருநாள் என்றது ஒருகால் என்பதுபட 
      நின்றது, ஒரியாண்டு என்றது நெடுங்காலம் என்பதுபட நின்றது.  ''ஒகு 
      பகல் பூசின் ஓராண்டு ஒழிவின்றி விடாது நாறும் பெரியவர் கேண்மை 
      போலும் பெறற்கரும் வாசவெண்ணெய் (சீவக. 2737) என்றார் 
      தேவரும்,
 99. திருமாண் உறுப்பிற்கு - 
      அழகுமாட்சிமைப்பட்ட  உறுப்பின்கண் பூசுதற் பொருட்டென்க, சீர் 
      -பொருளை ஆராய்ந்து கொள்ளுதல். நிறை - 
      எடுத்தலளவை.
 100்.கருமம்-மணங்கூட்டுந் தொழில். 
      வித்தகர்-சதுரப் பாடுடையோர்
 102.;நூல்வழி நுனித்த நுழைநுண் 
      உணர்வினர் என்றது சான்றோர் என்பதுபட நின்றது.
 103 நால்வர் செய்வது மரபு,"வாலிழை மகளிர் நால்வர் கூடி 
      .................... நீரொடு 
      சொரிந்த"என்றார்,அகத்தினும்(86)
 104 மூய - மூடப்பட்ட. 
      105. தாம் ; ஆசை, ஆட்டு என்னும் செய்தெனெச்சத்தைச் செயவென் 
      எச்சமாக்குக.
 | 
 |