|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 5. மண்ணூநீராட்டியது |  |  |  | திகுமணுத் தானம் பெருமண் உள்ளிட்டு மண்ணுறு மணியு மாலையுந் 
      தூசும்
 கண்ணுற 
      மொய்த்த கழிபேர் 
      அவாவினின்
 125    றேற்கு 
      மாந்தர்க் காற்ற வீசிப்
 பூவினுட் பொலிந்த தாமரை 
      போலத்
 தாவில் 
      அணியின் தான்மீக் கூரிய
 அறுவைக் கோதிய ஐவகை 
      வண்ணத்துத்
 துறைவிதி நுனித்த தூத்தொழி லாளர்
 130    
      கண்துளங் கவிரொளிக் கழூஉநிறம் பெறீஇய
 வெண்டுகில் இணைமடி விரித்தனர் 
      உடீஇச்
 செய்த 
      கொலத்துச் சித்திரங் காண
 |  |  |  | 122 - 132 ;  திருமணுத் 
      தானம்........சித்தரங் காண |  |  |  | (பொழிப்புரை)  மங்கலநீராடல் 
      குறித்து வழங்கும் தானமாக நிலமுட்பட  மணியும் மாலைகளும் ஆடைகளும் 
      முதலிய பொருள்களைப் பேரவாவினாலே இரவாநின்ற மாந்தர்கட்கு அவரவா 
      அடங்கும்படி நிரம்ப வழங்கிப் பின்னர் உதயணகுமரனுக்கு இரண்டாகிய 
      வெள்ளாடைகளை விரித்து உடுத்தித் தம்மாற்செய்யப்பட்ட ஒப்பனைத் 
      திறத்தின் மேலும் திறம்படச் செய்யும் ஒப்பனைகளைச் செயதற் பொருட்டு 
      என்க, |  |  |  | (விளக்கம்)  122. 
      திருமண்ணுத்தானம் எனற்பாலது, விகாரக்தால் திருமணுத்தானம் என நின்றது, 
      மங்கல நீராடற் பொருட்டு  வழங்கும் தானம் என்க. பெருமண் - 
      விரிந்த நிலம். என்றது பூதானத்தை. 123, கழுவிய மணிமாலையும் 
      பொன்மாலையும் என்க. நூசு-ஆடை.
 124.கண்ணுற - செறிய. மொய்த்த குழுமிய. 
      கழிபேரவா - மிகப் பெரிய அவா காரணமாக ஏற்கும் என்க,
 125. 
      ஆற்ற-நிரம்ப. வீசி - வழங்கி. அவா அடங்கும்படி நிரம்ப வழங்கி 
      என்க.
 126 மலர்களிலே தாமரை சிறந்தாற் போன்று அணிகளிலே 
      தலைசிறந்ததாகிய அறுவை என்க. பிற அணிபோலாது ; இன்றியமையாச் 
      சிறப்பிற்றாதல் கருதி அணியிற்றான் மீக்கூரிய அறுவைஎன்றாா'' மீக்கூர்தல் 
      - பெரிதும் சிறத்தல். ஐவகை வண்ணம் ; பொன்மை, வெண்மை, 
      கருமை, செம்மை, பசுமை என்பன.
 129. தூத்தொழிலாளர் என்றறு ஆடை 
      நெய்வோரை.
 130. கண்  துளங்கு அவிர் ஒளிக் கமூஉ 
      நிறம் பெறீஇ - காண்போர் கண்கூசி நடுங்குதற்குக் காரணமான விளக்கமுடைய 
      ஒளியாகிய தூய்மை செய்யப்பட்ட நிறமுடைத்தாகிய என்க. பெறீஇய 
      பெற்ற.
 131. இணைமடி-இரண்டாகிய ஆடை. உடீஇ - உடுத்து; 
      உடுத்துச் செய்த கோலத்தின்மேலும் சித்திரமான கோலஞ் செய்தற் 
      பொருட்டென்க
 | 
 |