|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 5. மண்ணூநீராட்டியது | | கனமணி முடியுங் கதிர்முத் தாரமும்
இனமணிப் பூணும் ஏக
வட்டமும் 140 வயிரக்
குழையும் வல்வினைப் பொலிந்த
நெடுந்தோள் வளையுங் கடுங்கதிர்க்
கடகமும் நாமர
வளியுங் காமர் கைவினைச்
சித்திரப் புனையலும் பத்திரச்
சுரிகையும்
பத்திக் கச்சினொ டொத்தவை
பிறவும் 145 ஆரணங் காகிய
பேரணி கலங்களும்
உழைப்பெருஞ் சிலதியர் பிழைப்பிலர் நீட்ட
| | [138-160,
உதயணகுமரனை
ஒப்பனைசெய்தல்.]
138 - 146 ; கனமணி,.,,,,,,நீட்ட
| | (பொழிப்புரை) மணிமுடிமுதலாகப்பத்திக்கச்சு ஈறாக ஈண்டுக் கூறப்பட்டனவும்,
இன்னோரன்ன பிறவுமாகிய அணிகலன்களையும் பணிமகளிர் தப்பின்றி
எடுத்தெடுத்துக் கொடா நிற்ப என்க.
| | (விளக்கம்) 138.
கனமணிமுடி-பொன்னானும் மணியானும் இயற்றப்பட்ட முடிக்கலன்
(கிரீடம்,) 139. கதிர்முத்தாரம் - ஒளியுடைய முத்துவடம்,
இனமணிப்பூண்-மாணிக்கவடம், ஏகவட்டம் ஓர் அணிகலன். 140,
வயிரமணியாலாகிய காதணி. தொழில் வன்மையாலே பொலிவுற்ற தோள்வளை என்க.
ஒளிமிக்க கடகம் என்க. கடகம் -கங்கணம். 142. நாமரவளி -
ஓரணிகலன், நாமாவளிஎன்றிருத்தல் வேண்டும் போலும்; ஆராய்க,
கைத்தொழிற்றிறனமைந்த அழகியசித்திரப்பிணையல் என்க; சித்திரமாலை,
பத்திச்சுரிகை பத்திக்கச்சு என்பன நிரல்படக் கோத்த
அணிகலன்கள் போலும் ஆரணங்காகிய, நிறைந்த அழகுடையனவாகிய என்க,
146. உழைப்பெருஞ் சிலதியர் - உடனிருந்து பணிசெய்யும்
. உரிமையுடைய மகளிர் என்க. நீட்ட- எடுத்துக் கொடுப்ப.
|
|