|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 5. மண்ணூநீராட்டியது | | அருவரை
பிளந்த அஞ்சுவரு
நெடுவேல் ஒருவலத்
துயரிய பொருவில்
புட்கொடித்
தளைஅவிழ் நறுந்தார்த் தனக்கிணை இல்லா 150
இளையவன் படிவம் ஏற்ப
இயல்புறீஇச் சித்திர
இருநிதிச் செந்நெறி நுனித்த
வித்தக வினைஞர் தம்முடன்
வந்து வடிவு கண்டிடும்
வத்தவர் பெருமகன்
ஒடிவில் வென்றி உதயண குமரன் 155
ஒருமெய் சேர்ந்திவை பெருமை
பெறுகென அருளின் அணியின்
அல்லதை இவற்கிவை
உருவென அணியா உறுப்புமுதல் அணிதலிற்
புண்ணிய முடையவிப் பொன்னணி
கலனென எண்ணிய
நெஞ்சமொடு நுண்வினைப்
பொலிந்த 160 கோல
வித்தகர் வாலணி புனைய
| | 148 - 160 ;
அருவரை பிளந்த.......வாலணி புனைய
| | (பொழிப்புரை) நுண்ணிய
தொழிற்றிறனாலே போலிவுற்ற ஒப்பனைத் தொழிலிலே சதுரப் பாடுடையோர்
அத்தூய அணிகலன்களைக் கைக்கொண்டு, அணிகலத் தொழிலைக்
கூரிதாகக் கற்ற பிற வித்தகரோடும் வந்நு கோலஞ்செய்து கொள்ளா நின்ற
உதயணகுமரனுடைய ஒப்பற்ற அழகிய உடம்பினைச் சேர்ந்து இவ்வணிகலன்கள்
பெருமை பெறுவனவாக என்னும் அருளுடைமையாலே இவற்றை அணிவதன்றி இவை
இவனுக்கு அழகு ஆகும் என்று கருதி அணியப்படாத இவற்றை அவனுடைய உறுபபின்கண்
அணிதலாலே இப்பொன் அணிகலன்கள் மிகவும் புண்ணியம் உடையனபோலே
இருந்தன என்று கருதுகின்ற நெஞ்சத்தோடே அவற்றை அவ்வுதயணன் வடிவம்
முருகக் கடவுளின் வடிவம் போலத் தோன்றும்படி அணியா நிற்ப என்க.
| | (விளக்கம்) கோல
வித்தகர், பிற வித்தகரோடும் வந்து கோலங்கானும் உதயணன் வடிவம்
இளையவன் வடிவம்போலத் தோன்றும்படி வாலணி புனைய என இயைத்துக்
கொள்க. 147 - 150 ; நெடுவேல் இளைவவன், புட்கொடியை
ஒருவலத்து உயரிய இனையவன், இனையில்லா இளையவன் எனத் தனித்தனி கூட்டுக,
அருவரை - கிரௌஞ்ச மலை. அஞ்சுவருநெடுவேல் - பகைவர்க்கு
அச்சம் வருதற்குக் காரணமான நெடிய வேல். ஒருவலம் - ஒப்பற்ற வெற்றி;
வெற்றியுடைமையாலே என்க. உயரிய - உயரந்த,பொருவில் - ஒப்பில்லாத.
புட்கொடி - கோழிக்கொடி,கட்டவிழ்ந்த நறிய கடப்ப மாலை என்க.
கடவுள் என்பது தோன்றத் தனக்கு இணையில்லா இளையவன் என்றார்.
இளையவன் - முருக்கடவுள். படிவம் - உருவம். இயல்புறீஇ -
அழகுசெய்து 151. சித்திர இருநிதி என்றது - அணிகலன்களை.
அணிகலத்தொழிலைக் கூர்ந்து கற்ற பிற வித்தகரோடு என்க, 152. வடிவு
கண்டிடும் - கோலஞ்செய்து கொள்ஞம், 153. வத்தவர்
பெருமகனாகிய ஒடிவில் வென்றி உதயணகுமரன் என்க. ஒடிவில் - குனறாத.
154. ஒருமெய் - ஒப்பற்ற அழகுடைய உடம்பு. இவை பெருமை பெறுக என்று நினையும்
அருளுடைமையாலே என்க. 157. உரு - அழகு.
உறுப்புமுதல்-உறுப்பின்கண். அணிதலின் - அணியப்படுதலாலே. புண்ணியமுடைய இவ்
வணிகலன் என்றது செய்யாமரபின செய்வனவாகக் கூறியபடி. வாலணி - சிறந்த
அணிகலன்
|
|