உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
6. தெய்வச் சிறப்பு |
|
வரிமான்
மகர மகன்றில் யானை
அரிமான் அன்ன மணிநிற எண்கினம்
50 குழவிப் பாவையொ டழகுபெறப்
புனைந்து பொருவில் பூதத்
துருவுபட வரீஇ
|
|
48- 51 ; வரிமான்...............வரீஇ
|
|
(பொழிப்புரை) புலி முதலியவற்றின்
உருவங்களோடு குழவிப் பாவை உருவங்களையும் ஒப்பற்ற
பூதவுருவங்களையும் எழுதி என்க.
|
|
(விளக்கம்) 48.
வரிமான்-புலி. மகரம்-ஒரு மீன், மகன்றில் - ஒரு
பறவை. 49. அரிமான் - சிங்கம். மணி நிற எண்கு இனம்-
நீலமணி போன்ற நிறமுடைய கரடியினம். 50.
சிறுமகவு வடிவமுடைய பாவை என்க. 51. பொருவுஇல்-ஒப்பில்லாத. வரீஇ
-எழுதி.
|