உரை
 
2. இலாவாண காண்டம்
 
6. தெய்வச் சிறப்பு
 
          மரகத மாலை நிரலமைத் திரீஇ
         எரிமலர்த் தாமரை இலங்கொளி எள்ளிய
         திருமணிக் கபோதஞ் செறியச் சேர்த்தி
 
        52 - 54; மரகதமாலை,.,,,,,,,..,,சேர்த்தி
 
(பொழிப்புரை)   மரகத மணிகளாற் செய்த மாலைகளை நிரலாகக் கட்டி வைத்துப் பொற்றாமரை மலரினது ஒளியைப்பழித்த ஒளியையுடைய அழகிய மணிகளா லியன்ற கபோதங்களை நெருங்கச் சேர்த்து வைத்தென்க,
 
(விளக்கம்) 52. இரீஇ-இருத்தி
    53. எரி - தீ. தீயிலிட்டு உருக்கிச் செய்த பொற்றாமரை மலர் என்க, இனி எரி போன்ற தாமரைமலர்
  எனினுமாம். எள்ளிய- இகழ்ந்த.
    54. மணிக் கபோதம்-மணிகளாற் செய்த கபோதம் என்னும்  உறுப்பு, இதனைச் சுவர்த்தலங்களின் வைக்கும் சித்திரக் கம்பி என்பர் சூடாமணி நிகண்டாசிரியர் (3 - 61).