| உரை | 
|  | 
| 2. இலாவாண காண்டம் | 
|  | 
| 7. நகர்வலங் கொண்டது | 
|  | 
| மல்லல் 
      ஆவணத் திருபுடை 
      மருங்கினும் நண்ணா மாந்த ராயினுங் கண்ணுறின்
 இமைத்தல் உறாஅ அமைப்பின் 
      மேலும்
 15     புதுமணக் கோலத்துப் 
      பொலிவொடு 
     புணர்ந்த
 கதிர்முடி மன்னனைக் காண்பது விரும்பி
 | 
|  | 
| (12-16 மகளிர் 
      செயல்) 12-16 மல்லல்...,..விரும்பி
 | 
|  | 
| (பொழிப்புரை)  காண்போர் 
      பகைவரே ஆயினும் காணுங்கால் கண்ணிமைத்துக் காண்டல் இயலாத இயற்கை 
      அழகின் மேலும் புதுமணக் கோலத்துப் பொலிவோடே பொருந்திய   
      ஒளிமுடியை யுமுடைய அத்வுதயண மன்னனைக் காணவிழைந்து  வளமிக்க 
      அங்காடித் தெருவின் இருபக்கத்தும் என்க. | 
|  | 
| (விளக்கம்)  12- 
      மல்லல்-வளம். ஆவணம்-அங்காடித்தெரு; (கடைத்தெரு) 13. 
      நண்ணாமாந்தல் - பகைவர். அவர் காணர் அரிதாகலின் கண்ணுறின் 
      என்றார்,
 14. இமைத்தல் உறாஅ- இமைத்துக் காண 
      வியலாத.காண்போர் கட்பொறியைத் தன் வயமாக்கிக் கோடலின் இமைத்தல் 
      இயலாதென்பது கருத்து. கண்டுகண்டமையாத பேரழகு என்பதாம்.அமைப்பு-இயற்கை அழகு.
 16. கதிர்முடிமன்னன்; உதயணகுமரன்,
 |