|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 7. நகர்வலங் கொண்டது | | 40 ஒன்பது விருத்தி
நன்பத
நுனித்த
ஓவவினை யாளர் பாவனை நிறீஇ
வட்டிகை வாக்கின் வண்ணக்
கைவினைக்
கட்டளைப் பாவை கடுப்பத் தோன்றிக்
குறைவினைக் கோலங் கூடினர்க்
கணங்காய் 45 நிறைமனை
வரைப்பிற் சிறையெனச்
செய்த
சுவர்சார் வாகத் துன்னுபு நிரைத்த
| | 40-46;
ஒன்பது....,ஏறினார்
| | (பொழிப்புரை) ஒன்பது
வகைப்பட்ட நன்றாகிய இருப்புக்களைக் கூரிதாகக் கற்ற ஓவியப்புலவர்
அவிநயம் நிறுத்திச் சித்திரப் பலகையின்கண் வரைந்த எழுதுகோலின்
திருத்தமும் தொழிலிற்றிறனும் அமைந்த பாவைபோலத்தோன்றி ஒப்பனைத்
தொழிற் குறையையுடைய ஏனைய மகளிர்க்குத் துன்பமுண்டாகும்படி இல்லங்களின்
பக்கத்தே காவலாக எடுத்த மதில் சார்வாக நெருக்கி நிரல்படச்
சார்த்தப்பட்ட நகர்காண் ஏணியில் விரைந்து ஏறாநின்றனர் என்க.
| | (விளக்கம்) (சில
மகளிர்) காவன் மகளிர் விலக்கவும் (தவிராராய்)பாவைபோலத் தோன்றிக்
குறைவினைக்கோலங் கூடிய ஏனை மகளிர்க்கு அணங்காய் நகர்காண்
ஏணியில் ஏறினர் என்று இயைபு காண்க. 40. ஒன்பது
விருத்தி-ஒன்பது வகைப்பட்ட கூத்திருப்பு, அவையாவன, 'புதுமுகம்,
உட்கட்டிதம், ஒப்படியிருக்கை, சம்புடம். அயமுகம், சுவத்திகம்,
தனிப்புடம், மண்டிலம், ஏகபாதம், எனுமிவை' (சிலப் 8-25.
அடியார்க்கு நல்லார். உரை) நண்பதம் - நன்றாகிய
இருக்கை. நுனித்த - கூரிதாகக் கற்ற. 41. பாவனை- அவிநயம்;
அவிநயம் தோன்ற நிறுத்தி என்க, 42. வட்டிகை-எழுதுகோல்.
வண்ணமும் கைவினையையும் உடைய என்க. 43. கட்டளைப்பாவை -
உவமங்காட்டி எழுதிய ஓவியப்பாவை. கட்டளை- உவமம். கடுப்ப
-ஒப்ப. 44. குறைவினைக்கோலம் -முற்றுப்பெறாத ஒப்பனைத்
தொழில்.ஒப்பனை முற்றுப்பெறாத மகளிர் ஏறற்கு இடம்பெறாமையில் அவர்க்கு
அணங்காய் என்றார். அணங்கு-துன்பம். 45,
சிறை-காவல், 46. சுவர்-மதில். துன்னுபு-துன்னி;நெருங்கி,
விரைவனர்; முற்றெச்சம்.
|
|