| (விளக்கம்)  48. 
      ஒருபுடை-அறத்தினது பக்கம். 49 இருபுடை-அறமறமாகிய இரண்டு 
      பக்கத்தினும்- ஏயர்மரபிற் றோன்றியவனாகிய 
      என்க,
 50. சிதை பொருள்-இடையிலே முறிந்துகெடும் 
      ஆள்வினை.
 
 'தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
 இடங்கண்ட பின்னல்  லது'  
      (திருக் - 491)
 எனவும்,
 'உடைத்தம் 
      வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
 இடைக்கண் முரிந்தார்  பலர்' 
      (திருக் - 473)
 எனவும், இன்னோரன்னபிறவும் அரசியலறமாகலின் அவ்வறத்திற்
      றவிராதான் என்பார் 'சிதைபொருள் வலியாச் செறிவுடைச் செய்தொழில்
      உதயணகுமரன்' என்றார்.என்றோதுதலும் உணர்க53. ஞாலந் திரியா-உலகின்கட் 
      பிறழ்தலில்லாத. இனிஞாலந் திரியினும் திரியாத நிறை என ஒருசொற் 
      பெய்துரைப்பினும் ஆம்.
 'நிலம்புடை பெயரினும் 
      விசும்புவந் திழியினும், கலங்காக் கடவுட் கற்பு' என்றிவ்வாசிரியரே 
      (இலா-17, 139 -40) கூறுதல் உணர்க, இனி 
      வள்ளுவனார்,
 'ஊழி பெயரினுந் 
      தாம்பெயரார் சான்றாண்மைக்
 காழி 
      எனப்படு 
      வார்'                 
      (திருக் - 189)
 திண்கோள்- திண்ணிய 
      கொள்கை, அஃதாவது கற்புடைமை; 'கற்பென்னும் திண்மை' என்பது வள்ளுவர் 
      மெய்ம்மொழி. (திருக் - 54.)
 54. உத்தம மகளிர் என்றது 
      குலமகளிராகிய கன்னியரை.
 |