உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
7. நகர்வலங் கொண்டது |
|
காட்சி
விரும்பன்மின் மாட்சி
யின்றென
ஈனாத் தாயர் ஆனாது விலக்கும் 65
ஆணை மறுத்தியாம் ஆண
முடைமையின்
இந்நகர் காண்கஎம் அன்னை மாரெனக்
|
|
63-
66 ; காட்சி...,..அன்னைமாரென
|
|
(பொழிப்புரை) உதயண
குமரனைக் காண்டல் விரும்பாதே கொண்மின்; அங்ஙனம் விரும்புதல்
மாட்சிமையுடைய தாகாது, என்று செவிலித் தாயர் இடையறாது தடுக்கவும்,
அவர்தம் கட்டளையை மறுத்து 'எம்மன்னையீர் ! யாம் உதயணனைக்காண
விரும்பினோமல்லேம்; ஒப்பனை செய்யப்பட்ட இச்சயந்தியின் அழகினை
மட்டுமே காண்பேம் எமக்கு அவ்விருப்பமிருத்தலானே ' என்று கூறி
என்க.
|
|
(விளக்கம்) செவிலியர்.
உதயணனைக் கண்ட மகளிர் எல்லாம் வருந்தினர் ஆதலான் நீயிர்
விரும்பன்மின் மாட்சியின்று என விலக்குகின்ற ஆணையை மறுத்து யாம்
ஆணமுடைமையின் நகர் காண்கம் என்று கூறி என
இயைக்க 63. விரும்பன்மின் - விரும்பாதே கொண்மின்.
64, ஈனாத் தாயர்-செவிலித்தாயர்..ஆனாது - அமையாது;இடையறாமல்.
65. ஆணம்- விருப்பம். 66. காண்கம்-காண்பேம். அன்னைமார்;
விளி.
|