|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 7. நகர்வலங் கொண்டது | | கண்ணின
வேட்கை பின்னின்று
துரப்ப
வாயின் மாடத்து மருங்குஅணி பெற்ற
வரிச்சா லேகம் விரித்தனர்
அகற்றித் 70 ததும்புங்
கிண்கிணித் தகைமலர்ச் சேவடிப்
பெதும்பை மகளிர் விதும்பி
நோக்கினர்
| | 67-71;
கண்ணின......நோக்கினர்
| | (பொழிப்புரை) தங்
கண்ணின் விருப்பம் பெரிதும் தூண்டிச்செலுத்துதலானே வாயின் மாடத்தின்கண்
அமைந்த சாளரங்களை அகலவிரித்துக் கதவுகளை அகற்றி விதுப்புற்று நோக்கா
நின்றனர் என்க.
| | (விளக்கம்) 67, கண்ணின
வேட்கை -கண்களுக்குரிய அவா;காட்சி -விருப்பம். துரப்ப -
செலுத்த. 69, வரிச்சாலேகம்-வரிகளையுடைய சாளரங்கள்,
விரித்தனர்; முற்றெச்சம், இதனால் விரிக்கவும் சுருக்கவுமியன்ற
சாளரங்களிருந்தமை விளங்கும். 71. பெதும்பை - மகளிரிக்குரிய
இரண்டாம் பருவம். விதும்பு தல் - காண்டற்கு விரைந்து
விரும்புதல்,
|
|