| (விளக்கம்)  72. 
      இயல்-அழகு. சாயல்-மென்மை, நிகர் - ஒப்பு. இல்லார் தமது காரிகை 
      என்க, 73. கடுநுனை - மிகக் கூர்த்த 
      நுனி,
 74. உட்கு-அச்சம்; ஊராண் ஒழுக்கு-ஒப்புரவொழுகும் 
      ஒழுக்கம்
 
 'கட்கினியாள் காதலன் காதல் 
      வகைபுனைவாள்
 உட்கு உடையாள் ஊராண் 
      இயல்பினாள் - உட்கி
 இடனறிந்று ஊடி இனிதின் 
      உணரும்
 மடமொழி மாதராள் பெண்'
     என நாலடியினும் வருதல் உணர்க, இதனை ஆசிரியர் நச்சினார்க்கினியர் 
      (தொல் - கற்பு - 12,) எடுத்துக்காட்டி ''ஊராண்மை,''. இது சுற்றம் ஓம்பல் 
      என்று விளக்கினர்.இனி, இவ்வாசிரியர் உஞ்சைக் காண்டத்து 
      36- 280-1 'வழுக்கிக் கூறினும் வடுவென நாணி, ஒழுக்க நுனித்த ஊராண் 
      மகளிர்' என்றோதுதலும் காண்க.
 75.  கட்கின் - 
      கண்ணுக்கு இனிய. கட்டிரை - அத்தூண்டிலி்ற் கட்டப்படும் இரை.
 76. இருங்கண் ஞாலம் - பெரிய இடத்தையுடைய உலகம்;
 77. 
      அருங்கலம்-பேரணிகலன், வெறுக்கை -பொருள்.
 78. வழாஅ 
      -வழுவாத.
 |