|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 7. நகர்வலங் கொண்டது | | பூங்குழை
மகளிர் புனைமணிப் பைம்பூண் 80
ஒளிபெற் றிலங்கும் உதயண குமரன்
அளிபெற் றமர்ந்த அம்பூஞ்
சேக்கையுள்
உவக்கும் வாயறிந் தூடி மற்றவன்
நயக்கும் வாயுள் நகைச்சுவைப்
புலவியுள்
நோக்கமை கடவுட் கூப்பினுங்
கதுமெனப் 85 பூம்போ தன்ன
தேங்குவளைத்
தடக்கை
வள்ளுகிர் வருட்டின் உள்குளிர்ப் புறீஇப்
பஞ்சி அணிந்த அஞ்செஞ்
சீறடிப்
பொன்னணி கிண்கிணிப் போழ்வாய் நிறையச்
சென்னித் தாமத்துப் பன்மலர்த்
தாதுக 90 இரந்துபின் எய்தும்
இன்சுவை
அமிர்தம்
புணரக் கூடின் போகமும் இனிதென
| | 79-
91 .. புனைமணி.......இனிதென
| | (பொழிப்புரை) உதயணகுமரனது
தண்ணளியைப் பெற்று அமர்ந்த பூம்படுக்கையின்கண், அவனோடே இடனறிந்தூடி
அவன் பெரிதும் பணிமொழி கூறி நயந்தவிடத்தே இனிதின் உணர்ந்து, மகிழும்
நகைச்சுவைக் கிடனான புலவியின்கண் காமநோக்கம் பொருந்திய
அவனது வணக்கத்தானும், செந்தாமரை மலர்போன்ற அவனது கையின்நகம்
வருடுதலானும் நெஞ்சம் குளிர்ந்து அலத்தகமணிந்த அழகிய சிவந்த
சிற்றடியிலே அணியப்பட்ட பொன்னாலாகிய அழகிய கிண்கிணியினது
பிளவுபட்ட வாய் நிரம்பும்படி அவனது தலைக்கண்ணியின்கண் உள்ள பலவாகிய
மலர்த்தாது உதிராநிற்ப . அவன் இரப்பப் பின்னர் எய்துவதாகிய
இனிய காமச்சுவையின்பமாகிய அமிழ்தம் பொருந்தும்படி கூடப்பெறின்
இவ்வுலகத்தே நுகரப்படும் காம வின்பமும் ஆற்றவும் இனிதேயாம் என்று
என்க..
| | (விளக்கம்) இஃது
அம்மகளிர் உதயணனோடு தாம் கூடப்பெற்றால் உண்டாகும் பேரின்பத்தைத்
தம்முள்ளே கற்பனை செய்து கொண்டு ஏங்குதலைக்
கூறிற்று. 79 - 80. புனைமணிப் பைம்பூண் ஒளி பெற்று இலங்கும்
உதயணகுமரன் - அணியப்பட்ட மணியானியன்ற பசிய அணிகலன்களாலே
ஒளிபெற்றுத் திகழாநின்ற உதயணகுமரன் என்க. 81, அளி
- அருள். அம்பூஞ்சேக்கை - அழகிய மலர்ப்படுக்கை. 82.
வாயறிந்தூடி மற்றவன். நயக்கும் வாய்உள் உவக்கும் புலவி என மாறிக்கூட்டுக.
காமவின்பத்தை புலவி பெருக்குதலின் புலந்து பெறுமின்பத்தையே
கருதினார.் 82. வாயறிந்தூடி-.இடனறிந்து ஊடி 83.,
நயக்கும் வாய் ஊடலுணர்த்தும் பொருட்டுப் பணிமொழி கூறிப்
புணர்ச்சியை விரும்புமிடத்தே. தலைவன் பணிமொழி கூறிஇரக்குங்கால்
நகைச்சுவை தோன்றுதலும் இயல்பாகலின். நகைச்சுவைப் புலவி என்றாள். 84,
நோக்கு-காமநோக்கம், கடவுட், கூப்பு-கடவுளைக் கைகுவித்துத் தொழுமாறு
கைகுவித்துத்-தொழும் வணக்கம் என்க. கதுமென- விரைவுக் குறிப்பு 85,
தேங்குவளை ; வினைத்தொகை, நிறைந்த தோள்வளையலை அணிந்த தடக்கை என்க.
86. வருட்டுதல்-தடவுதல். உள்-நெஞ்சம். குளிர்ப்புறீஇ-குளிர்ந்து,
87. பஞ்சி - செம்பஞ்சுக்குழம்பு; அலத்தகம். 88.
கிண்கிணி-சதங்கை. போழ்வாய் -பிளவுபட்டவாய், 89, அடியில் முடி பொருந்த
வீழ்ந்து வணங்க என்பாள் சென்னித்தாமத்து மலர்த்தாதுக இரந்து என்றாள்.
இரந்தென்னும் எச்சத்தை இரப்ப எனத் திரித்துக்
கொள்க. 91. போகமும்என்புழி உம்மை,
சிறப்பு.
|
|