|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 7. நகர்வலங் கொண்டது | | மீட்டல்
செல்லா வேட்ட
விருப்பொடு
கோடுகொள் மயிலின் குழாஅம்
ஏய்ப்ப
மாடந் தோறு மலிந்திறை கொண்டனர்
| | 92-94:
மீட்டல்................கொண்டனர
| | (பொழிப்புரை) மீட்பதற்கியலாத வேணவாவோடு மலைச்சிகரங்களிலே ஏறிய மயிற்கூட்டம்
போல மாடமாளிகை தோறும்மிக்குக் கூடித் தங்காநின்றனர்
என்க.
| | (விளக்கம்) பூங்குழை
மகளிர் உதயணகுமரன் இரப்ப எய்தும் இன்சுவை அமிர்தம் புணரும்படி கூடப்
பெறின் போகமும் இனிதே என்று கூறி வேணவாவோடு மாடங்களின் மிசை
மயிற்குழாம் போலக் கூடியிருந்தனர் என்க, 92,
மீட்டல் செல்லா -அவன்பால் செல்லும் மனத்தை மீட்கமாட்டாமைக்குக்
காரணமான ( விருப்பம்) என்க. 93. கோடு - மலைச்சிகரம்.
ஏய்ப்ப - ஒப்ப, 94. மலிந்து-மிக்கு, இறைகொண்டனர்
-தங்கினர்.
|
|