|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 7. நகர்வலங் கொண்டது | | வெண்முகில் நடுவண் மீன்முகத் தெழுதரும்
105 திருமதி என்னத் திலக
வாண்முகம் அருமணி
மாடத் தகவயிற் சுடர
வாட்கெழு மழைக்கண் வாசவ
தத்தை தோட்குத்
தக்க தொடுகழற்
குருசிலைக்
கண்டீர் நீங்கிக் காணிடந் தம்மென
110 விண்தீர் மகளிரின் வியப்பத்
தோன்றி அரிமதர்
நெடுங்கண் அளவிகந் தகல
இருமுலைப் பொற்பூண் இடவயின்
திருத்தாத்
தெரிவை மகளிர் தேமொழிக் கிளவிக்
குழித்தலைப் புதல்வர் எழிற்புறம்
வரித்த 115 அஞ்சாந் தழிய ஆகத்
தடக்கி நுண்சா
லேகத் தெம்பரு நோக்கினர்
| | 104- 116;
வெண்முகில்....,,...நோக்கினர்
| | (பொழிப்புரை) இனித்
தெரிவைப் பருவத்து மகளிர் திங்களை ஒத்த தமது ஒளிமுகம் மாடத்தினூடே
ஒளிரும்படி வானுலகைவிட்டு மண்ணுலகத்தே வந்து கூடிய தேவமகளிரோ எனக்
கண்டோர் மருளும்படி வந்து தோன்றி, வாசவதத்தையின் தோளுக்கேற்ற
குருசிலைக் கண்டீரே! நீயிர். கண்டதமையும், இனி யாங்
காணும்பொருட்டு விலகி இடந்தாருமின் என்று கூறித் தமது அகன்ற விழிகள்
அளவின் மேலும் விரியும்படி விழித்துத் தம் மக்களை மார்போடணைத்து நின்று
எவ்விடத்தும் உள்ள சாளரந்தோறும் நோக்கா நின்றனர் என்க..
| | (விளக்கம்) தெரிவை
மகளிர் முகம் சுடரத் தோன்றிக் காடணிந் தம்மெனக் கூறிப் புதல்வரை
ஆகத்தடக்கிச் சாலேகத்து எவ்விடத்தும் நோக்கினர்
என்க. 104. வெண்ணிற மாளிகையின் ஊடே தம்மக்களோடே
தோன்றித் திகழும் மாதர் முகத்திற்கு, வெண்முகில் ஊடே மீன்களோடே
தோன்றும் திங்கள் மண்டிலம் உவமை என்க. மீன் - விண்மீன்.
இது புதல்வர் முகத்திற்கு உவமை என்க, மீன் முகம் என்புழி முகம் என்னும்
ஏழாவதன் உருபு மூன்றாவதன் பொருளில் மயங்கிற்று. மீனொடு எழுதரும் என்க.
105. திருமதி-அழகிய திங்கள் மண்டிலம், இனித் திலகத்திற்கு மீன் உவமை
எனினுமாம். 106. அரிய மணிகளாலியன்ற மாடத்தினுள்ளே
என்க. 106. வாளை ஒத்த கண். குளிர்ந்த கண் எனத் தனித்
தனிகூட்டுக. 108. தொடுகழல் குருசில்-கட்டிய வீரக்கழலையுடைய
தலைவனாகிய உதயணன் என்க. 109. கண்டீர்.விளி
;காண்இடம்-நின்று காண்டற்குரிய இடம். தம்-தாருங்கன்,
110, விண்தீர் மகளிரின் - தமக்குரிய வானுலகத்தை விடுத்து வந்த தேவ
மகளிர்போல என்க. கண்டோர் மருள என்க. 111. அரிமதர்
நெடுங்கண் -செவ்வரி கருவரி படர்ந்த களிப்புடைய
நீண்ட விழிகள். அளவின் இகந்து அகல -அவை இயல்பாய் விரியும்
அளவினைக் கடந்து மிகவிரியும்படி என்றவாறு; ஆசையாலே கண்ணை
அகலவிரித்து என்றபடி. 112. இருமுலைகளிடத்தும் பூணப்பட்ட
பொற்பூனை அஃதிருக்குமிடத்தே கிடக்கும்படியாக விட்டுச் சீர்திருத்துதல்
செய்யாத மகளிர் என்றவாறு. அஃதாவது; குழவி அடுக்கடி பாலுண்ணுமாகலின்அதனைத்
திருத்தியிடுதல் இலர் என்றவாறு. 113,
தெரிவை -மகளிர்க்குரிய பருவம் ஏழனுள் ஒன்று; தாய்மைப் பருவம் என்க.
இனிய மழலைச் சொல்லையும் தலையிடத்தே குழி எழுதிய, 115
அஞ் சாந்து-அழகிய சந்தனம். ஆகம்-மார்பு. 116. நுண்சாலேகம்- நுணக்கமான
வேலைப்பாடமைந்த சாளரம். எம்பரும் -
எவ்விடத்தும்,
|
|