|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 7. நகர்வலங் கொண்டது |  |  |  | மீட்டகம் புக்கு மேவரு 
      செல்வமொடு மங்கல மண்ணுநீர் மரபின் 
      ஆடக்
 கொங்கலர் கோதையைப் பண்டுமுன் பயின்ற
 150    தோழி தானே தாழாது 
      விரும்பிக்
 கைந்நவில் கம்மத்துக் கம்மியன் புனைந்த
 செய்கலத் துள்ளுஞ் சிறந்தவை 
      நோக்கி
 ஏற்குந் 
      தானத்துப் பாற்பட அணிந்து
 |  |  |  | (147 - 153 ; 
      மேவரு,.,.,...,,அணிந்து |  |  |  | (பொழிப்புரை)  விருப்பம் 
      வருவதற்குக் காரணமான செல்வத்தோடே, மங்கலநீர் முறைப்படி ஆடிய பின்னர் 
      வாசவதத்தையைக் காஞ்சனமாலை என்னும் தோழியே காலந் தாழ்த்திராமல் 
      விரும்பித் தொழிற்றிறமமைந்த கம்மியன் இயற்றிய அணிகலன்களினும் 
      சிறந்தவற்றை ஆராய்ந்தெடுத்து அவற்றை ஏற்கும் உறுப்புக்களிடந்தே 
      அணிந்து என்க. |  |  |  | (விளக்கம்)  147. 
      .நகர்வலஞ் செய்து முடித்தபின் நீராடும் முறைமை உண்டாகலின் 
      அம்முறைக்கேற்ப ஆட என்க, மே- விருப்பம்; மேன்மையுமாம். கொங்கு - மணம், 
      தேனுமாம், கோதை; (ஆகுபெயர்) வாசவதத்தை. வாசவதத்தைக்கு 
      அடிநாட்டொட்டுத் தோழியாயிருக்கும் காஞ்சனமாலை என்க. 150. தாழாது - 
      காலந் தாழ்த்தாமல்,
 151, கைத்தொழிற்றிறமிக்க கம்மத் தொழிலையுடைய 
      கம்மியன் என்க.
 152, செய்கலம்; வினைத்தொகை; 
      அணிகலம்.
 153. ஏற்குந்தானம் - அவற்றை ஏற்றற்குரிய 
      உறுப்பு,
 | 
 |