(விளக்கம்) 6, கண்ணகன் கிடக்கை
-உலகம்; அஃது ஆகுபெயராய் வாழ்கைக்கு ஆயிற்று. கண்ணகன் கிடக்கைக்கும் எனற் பால
உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது, 7. கலி-ஒசை. ஒசை
பொருந்திய வானவூழி முதலிய ஐவகை ஊழியினுள் என்க. அவற்றைக்,
'கருவளர் வானத் திசையிற் றோன்றி உருவறி வாரா ஒன்றன்
ஊழியும் உந்துவளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும் செந்தீச்
சுடரிய ஊழியும் பனியொடு தண்பெயல் தலைஇய ஊழியும்
அவையிற் றுண்முறை வெள்ள ழூழ்கியார் தருபு மீண்டும்
பீடுயர் பீண்டி அவற்றிற்கும் உள்ளீ டாகிய இருநிலத் துழியும்' (
பரிபா.2 . 5 . 12 ) எனவரும் பரிபாடலான் உணர்க. 7,
நிலத்தை உள்ளீடாகத் தழுவி நிலைபெற்ற நில ஊழிதோறும் என்க. மன்னிய
நிலைபெற்ற. 8. கண்ணகன் கிடக்கைக்கும் புண்ணிய-உலகிற்கும் எனக்
கூட்டுக, என்றது இவ்வுலக வாழ்விற்கும் மேனிலை உலகத்தே சென்று வாழும்
வாழ்விற்கும் என்றவாறு. புண்ணிய உலகம்-புண்ணியத்தால் எய்தும் மேனிலை
யுலகம். பொலிவு தருவதனை பொலிவிற்று என்றார். 9.
தொன்று-பண்டைக்காலத்து. ஓங்காளர் -உயர்ந்தோர் இனி, புகழ்
இவ்வுலகிற்கும் மேனிலையுலகிற்கும் பொலிவிற்
றென்றதனோடு, 'ஈத லிசைபட வாழ்தல்
அதுவல்ல தூதிய மில்லை
உயிர்க்கு'
(திருக்-231) எனவும், 'ஒன்றா
உலகத் துயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்
றில்' (திருக் -
233) எனவும், 'நிலவரை
நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது
புத்தே ளாலகு'
(திருக் - 234) எனவும்,
'இவண் இசையுடையோர்க்
கல்ல தவண துயர்நிலை உலகத்
துறையுள் இன்மை விளங்கக் கேட்ட
மாறுகொல்' (புறநா -
50) எனவும், வரும் சான்றோர் மெய்மொழிகளையும் ஒப்பு
நோக்கியணர்க 12-23, வால்நிறஅமிர்தம்-பால்,
மலைப்பெய்நெய்-தேன். இவை வெவ்வேறிடத்துப் பிறந்தனவாயினும் தம்முட்
கலப்புற்றுழி பண்பினாலே ஒன்றுபடுதல் போன்று. உதயணனும் தானும் வேறு
வேறிடத்தினராயிருப்பினும் நண்புடைமையலே ஒன்றுபட்ட
அமைதியினையும் என்க. 14. அளைஇய-கலந்த. 15.
விசையம் - வெற்றி. 16. பெருநில மன்னர்- முடிவேந்தர், காழ்த்த -
(பயின்று)முதிர்ந்த. 17. அருமதி - பெறற்கரிய
நுண்மாணுழைபுலன். 18. இன்னவை - இவைபோல்வன.
|