உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
8. யூகி போதரவு |
|
மன்றணி
வீதி மதில்உஞ் சேனைதயுள் 20 வென்ற
கொற்றமொடு விசயம்
எய்தி இறைவற்
பிரிக்கும் அறிவிற் சூழ்ந்த
படிவ உருவம் பட்டாங்
கெய்தி இடியுறழ்
முரசின் ஏயர் இறைவன்
கண்ணியது முடுத்துக் காரிகை
பொலிந்த 25 வண்ணக் கோதை வாசவ
தத்தையொடு வழிமுதற்
கொண்ட கழிமுதற் கங்குலின
|
|
19-26 ; மண்றணி.............கங்குலின்
|
|
(பொழிப்புரை) மன்றுகளை அணிந்த
வீதியினையும் மதிலையுமுடைய உஞ்சை நகரத்தில் பிரச்சோதனனால் வென்று
கொள்ளப்பட்ட அசவுரிமையோடே வெற்றியும் உடையனாக உதயணவேந்தனைச்
சிறைவீடு கொள்ளும்பொருட்டு ஆராய்ந்து மேற்கொண்ட வேற்று
வடிவமாகிய பேய்வடிவம் உள்ளபடியே எய்தி இடி போன்று முழங்கும் முரசினையுடைய
ஏயர்குலத் தோன்றலாகிய அவ்வுதயணகுமரன் தான் கருதிய காரியத்தை முடித்துக்
கொண்டு அழகானே பொலிவுற்ற நிறமிக்கமலர் மாலையையுடைய
வாசவதத்தையோடு புறப்பட்ட முதலிரவின் கண் என்க.
|
|
(விளக்கம்) 19, மன்று-அறவோர்
மன்றம்,கூத்தாடுமன்றம், ஊரம்பலம் முதலியன. உஞ்சேனை -உஞ்சை
நகரம். 20 வென்ற-வெல்லப்பட்ட. கொற்றம்; ஆகுபெயர்;
உரிமை. 21. இறைவன்; உதயணகுமரன். அறிவினாலே ஆராய்ந்து துணிந்த
(உருவம்) என்க. 22. படிவஉருவம் - வேடமாக மேற்கோண்ட
வடிவமாகிய பேய்வடிவம என்க, பட்டாங்கு -உள்ளபடியே. 23.
கண்ணியது -தான் நினைத்தசெயலை. காரிகை-அழகு. 24. வழிமுதற்கொண்ட
- வழிமேற் புறப்பட்ட, கழிமுதற் கங்குலின் - கழிதற்குக் காரணமான
முதலி்ரவில்.
|