உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
8. யூகி போதரவு |
|
மல்குகடல்
தானை மன்னரை
வணக்கிப் பில்குகளி
யானைப் பிரச்சோ
தனனெனும் ஐந்தலை
நாகம் அழல வெகுட்டிப்
30 பைந்தளிர்க் கோதையைப் பற்றுபு தழீஇச்ன
|
|
27 - 30; மல்கு........தழீஇ
|
|
(பொழிப்புரை) அவ்வுதயணகுமரன்
பெருகிய கடல் போன்ற படையுடனே தன்னை எதிர்த்த அரசர்களை வென்று தன்னை
வணங்கும்படி செய்து, மதஞ்சொரியும் களிப்பினையுடைடைய யானையையுடைய
பிரச்சோதன மன்னன் என்னும் ஐந்தலை அரவினை வெகுள்வித்துப் பசிய தளிர்
விரவிய மலர்மாலையினையுடைய வாசவதத்தையையும் கைப்பற்றித் தழீஇக்
கொண்டு,என்க,
|
|
(விளக்கம்) 27. மல்கு-பெருகிய, கடலை
ஒத்த பெரும்படையுடனே வந்து எதிர்த்த என விரிக்க. மன்னர் -
வாசவதத்தையை மீட்டற்கு வந்த அரசர். 28. பில்கு
களியானை-மதம்சொரியா நின்ற களிப்பினையுடைய
களிற்றியானை. 29. சினமிகுதி கூறுவார் ஐந்தலை நாகம் என்று
உருவகித்தார். 'ஐவாய் அரவின் அவிரழல்
போன்று சீறி'. (சீவக 2345)என்றார். திருத்தக்தேவரும்.
அழல-நெஞ்சழலும்படி. வெகுட்டி; பிறவினை;
வெகுளச்செய்து, 30. கோதை ; வாசவதத்தை. பற்றுபு -கைப்பற்றி.
தழீஇ- தழுவிக் கொண்டு.
|