|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 8. யூகி போதரவு | | உரைத்த
வண்ணமு மிகப்பல
வாகத் தொல்லோர்
முன்னர்த் தோன்றக் காட்டி
40 ஒல்கா வென்றி உதயணற்
றடைஇய
வெல்போர்ப் பெரும்படை வேந்தன் விடுத்ததும்
விடுத்த பெரும்படை விளியத்
தாக்கி உடைத்த
தோழர் ஊக்க வென்றியும
| | 38 - 43 : மிகப்பல..,,..,ஊக்க வென்றியும்
| | (பொழிப்புரை) அவையத்துச்
சான்றோர் முன்னர்த் தன் வெகுளிதோன்றப் பலபடப் பேசிப் பிரச்சோதன
வேந்தன் உதயணனைத் தடுத்துப் பற்றிவருதற் பொருட்டுத் தனது போர்ப்படையை
ஏவியதும், அப்படை கெடும்படி தாக்கி அதனைத் தோற்கச் செய்த
தந்தோழருடைய ஊக்கமிக்க வெற்றியினையும் என்க.
| | (விளக்கம்) 39.
தொல்லோர்-பழையோர் ஆகிய அவையத்தார். 40. ஒல்கா வென்றி -
தளராதவெற்றி. தடைஇய - தடுத்தற்கு. 41. வேந்தன் படை விடுத்ததும்
எனமாறுக. வேந்தன்;பிரச்சோதனன். 42.விளிய - அழிய. உடைத்த -
உடைந்தோடச் செய்த - தோழர்- ஆண்டு் கரந்துறைந்த
நண்பர். 43,ஊக்கத்தாலுண்டான வெற்றியையும் என்க,
|
|