|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 8. யூகி போதரவு | | வென்றி
வியனகர் வெந்துயர் உற்றதும் 45
பட்டாங் குணர்ந்து முட்டாங்
கியற்றி உணரா
தான்போல் ஒருமீக்
கொற்றவன் புணரா
தார்முற் பொச்சாப்
பஞ்சி வணங்குகொடி
மருங்குல் வாசவ தத்தையைப்
பயந்தினி தெடுத்த பத்தினித் தெருட்டி
50 உயர்ந்த கோயிலுள் ஒடுங்கிய ஒடுக்கமும
| | 44 - 50 : வென்றி...,..,ஒடுக்கமும்
| | (பொழிப்புரை) பிரச்சோதனன்
வெற்றியையுடைய தன் உச்சயினி - நகரத்துள்ளோர் வெவ்விய துயர்
எய்தியதனையும் ஆண்டு நிகழ்ந்த பிறவற்றையும் நிகழ்ந்தபடியே உணர்ந்தும்,
அவற்றை உள்ளத்தே அடக்கி அறியாதான் போன்று தன் பொச்சாப்பினைப்
பகைவர் உணர்தலை அஞ்சி அரண்மனையகத்தே சென்று தன் பெருந்தேவியைத்
தேற்றி உயர்ந்த அவ் வரண்மனையினுள்ளேயே ஒடுங்கியிருந்தமையையும்
என்க.
| | (விளக்கம்) 45. உள்தாங்கு
இயற்றி - உள்ளத்திலே தாங்குதலைச் செய்து; அடக்கி
என்றவாறு, 46, புணராதார் - பகைவர்; அவர் முன்னர்த் தன்
பொச்சாப்பு வெளிப்படுதற்கு அஞ்சிஎன்க, பொச்சாப்பு - உவகை
மகிழ்ச்சியிற்சோர்வு. 48. வணங்குகொடி - வளைகின்ற பூங்கொடியை
ஒத்த. 49. பயந்து-ஈன்று. பத்தினி-ஈண்டு மனைவி என்னும் பொருட்டாய்
நின்றது. தெருட்டி - தேற்றி, 50. (47) பொச்சாப்பு
அஞ்சி ஒடுங்கிய ஒடுக்கமும் என்க.கோயில்-அரண்மனை.
|
|