உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
8. யூகி போதரவு |
|
நளிவரை அன்ன நளகிரி ஏறி
ஒளிமணிக் கொடும்பூண் உதயண
குமரனைப் பற்றுபு தம்மின்
செற்றெனப் பகைகொண்டு
வெற்ற வேந்தன் வெகுண்டெழல் இன்மையும
|
|
51-54 : நளிவரை................எழலின்மையும்
|
|
(பொழிப்புரை) வெற்றியையுடைய
அப்பிரச்சோதன மன்னன் அந்நிகழ்ச்சியை உணர்ந்தவுடண் உதயணன்பாற்
பகைமைகொண்டு தன் நளகிரி என்னும் களிற்றியானையில் ஏறித் தன் படைஞரை
நோக்கி ''ஒளிமிக்க மணிகளையுடைய வளைந்த அணிகலனை அணிந்த
அவ்வுதயணகுமரனை நெருங்கிப் பற்றிக்கொண்டு வம்மின்'' என்று
கட்டளையிட்டவனாய் சினந்துஎழுதல் இல்லாமையும் என்க.
|
|
(விளக்கம்) நளிவரை-பெரிய மலை. இது
நளகிரி என்னும் களிற்றியானைக்குவமை.பிரச்சோதனன் இந்நிகழ்ச்சியினை
உணர்ந்தவுடனே இங்ஙனம் வெகுண்டு எழுதல் வேண்டும்; அங்ஙனம்
எழுதல் இல்லாமையும் என்க. எனவே, பிரச்சோதனனுக்கு உதயணன்பால் உட்பகை
சிறிதும் இல்லை என்பதனையும் இதனால் அறிந்தும் என்பது கருத்து.
|