|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 8. யூகி போதரவு | | யாப்புள் உறுத்த அமைதிச்
சூழ்ச்சியன் செறிந்த
செய்கை அறிந்துமனத்
தடக்கிச் செறுநன்
போலச் செல்வ வேந்தனும்
95 உறுநர் வேண்டும் உள்பொருட்
குடன்றொரு மறுமொழி
கொடுப்பின் அல்லது மனத்தில்
துன்பாற் பட்டமை நன்பால்
நுனித்து நூலியல் நெறியினு
மதியினுந் தெளிந்நு
சொல்வேறு குறியொடு சுழன்றகத் தொடுங்கிய 100
பல்வே றுருவிற்றம் படைநரைப் பயிர்ந்து
| | 92 - 100; யாப்பு.......பயிர்ந்து
| | (பொழிப்புரை) கட்டுப்பாடினை
அகத்தேயுடைய அமைப்பினையுடைய குழ்ச்சியையுடையனாய் மேலும்,செறிவுடைய
செயல்களை ஒற்றியுணர்ந்து அவை, புறத்தார்க்குப் புலப்படாமல் மனத்துள்ளே
அடக்கிக்கொண்டு தஞ்செல்வம் போன்ற வேந்தனாகிய உதயணகுமரனையும் தம்
பகைவன் போலக் காட்டித் தமர் விரும்பாநின்ற உள் பொருள்களை
ஒற்றி உணர்தற் பொருட்டு அந்நகரத்துள்ளே திரிந்து, ஆண்டுள்ளேரர் தாம்
வினவியவினாவிற்கு மறுமொழி கொடுத்தவிடத்தும்,அல்லாதூஉம் அப்பிறர்
நெஞ்சத்தினுள்ள துன்பத்தால் மெய்ப்பாடாக வெளிப்பட்டவற்றையும் நல்ல
ஒற்றியற் பகுதியாலே ஒற்றிக் கூரிதாக உணர்ந்தும்,நூலியலறிவானும்,
தம்மியற்கை மதி நுட்பத்தானும் ஆராய்ந்து உண்மை தெளிந்து வேறுபட்ட
சொல்லோடும் வேடத்தோடும் அந்நகரத்தூடே சுழன்று மறைந்திராநின்ற பலவேறு
வேடமுடைய தம் படைமறவரைச் சங்கேத ஒலியானே ஓரிடத்தே வரவழைத்து
என்க. என்க.
| | (விளக்கம்) யூகி சூழ்ச்சியனாய் அகத்தொடுங்கிய படைஞரைப் பயிர்ந்து என
இயைக்க, 92, யாப்பு - கட்டுப்பாடு. 94. செல்வ
வேந்தனும் செறுநன்போலக் காட்டி என்க. ஆண்டுள்ளார் உயதயணனைப்
பகைவனாகக் கருதுதற்கேற்பத் தஞ்சொற் செயல்களானே உதயணனைப் பகைவன்
போலக்காட்டி என்பது கருத்து. இங்ஙனம் காட்டுதல் தம்மறை வெளிப்படாமைப்
பொருட்டென்க, உறுநர் - உறவினர், தமர். 96, மறுமொழி
கொடுப்பினும் அல்லது நுனித்தும் என இயைக்க. 98. நூல்-ஒற்றுநூல்,
மதி-இயற்கை நுண்மதி, 99, வேறு சொல் குறிகளையுடையராய்த்
திரிந்தென்க. 100. படைநர்-மறவர், பயிர்ந்து-அழைத்து.
|
|