|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 8. யூகி போதரவு | | 130
தேகச் செய்தபின் ஆகுபொருள்
நாடிக் கடவுட் பள்ளியுட்
கள்ள ஒழுக்கொடு நெடுநகர்
மாந்தர் நெஞ்சுணத் திரிதரும்
ஒட்டிய தொழரொடு கட்டுரை
விரும்பி மூன்றிடம்
பிழையா ஆன்ற நுண்ணெறிப் 135 பண்ணவர்
முனிவர் பட்டதும் படுவதும்
எண்ணுவ ராயின் ஏதந் தருமென
நினைத்தோன் பெயர்ந்து நெறியில் தீ்ர்ந்தவர
| | 130 - 138; ஆகுபொருள்,,..,,பெயர்ந்து
| | (பொழிப்புரை) தமக்கு ஆக்கமான.
பொருளை விரும்பித் துறவியர் பள்ளிகளிடத்தே இருந்து வஞ்ச
வொழுக்கத்தோடே நெடிய அவ்வுச்சயினி நகரத்துள்ள மாந்தரின் உள்ளத்தே
கிடக்கும் பொருளைக் கவர்ந்துகொள்ளற் பொருட்டுத் திரிதரா நின்ற
நெருங்கிய தோழர்களைக் கண்டு அவர் மொழிகளையும் கேட்டற்கு விரும்பி
மனமொழி மெய்களாகிய மூன்று கருவிகளானும் பிழைசெய்தலில்லாத நிரம்பிய
நுண்ணிய தவநெறியினை யுடைய பண்ணவராகிய துறவோர் முக்கால
நிகழ்ச்சிகளையும் அறிந்து கொள்ளுமியல்பினராவர்; ஆகவெ அவர்
நந்திறத்தினும் அவற்றை எண்ணுவாராயின் அவ்வெண்ணம் நமக்குத் தீங்கு
தருவதாகுமே என்று ஒருகால் நினைத்தவன் மீண்டும் என்க.
| | (விளக்கம்) 130. ஆகுபொருள்-.தமக்கு ஆக்கந்தரும் பொருள். 131. கடவுள்பள்ளி
-துறவோரிருக்கை,கள்ளவொழுக்கம்-துறவாதே வைத்தும் துறந்தோர்போல் ஒழுகும்
வஞ்சவொழுக்கம். 132. நெஞ்சுண -
நெஞ்சிலுள்ளவற்றைக்கவர்தற்கு. 133, ஒட்டிய தோழர் - நெருங்கிய
நண்பர், 134, மூன்றிடம்-மன மொழி மெய்கள்.நுண்ணெறி என்றது-
தவநெறியை. 135. பண்ணவர்-துறவியர்; மனம் பண்பட்டவர் என்பது
பொருள். முனிவர் - உலகத்தை முனிந்தவர், பண்ணவராகிய துறவோர் என்க.
பட்டது - இறந்தகாலத்தே நிகழ்ந்தது, படுவது - எதிர்காலத்தே நிகழ்வது.
நிகழ்காலத்தே நிகழா நின்றதனை ஏனையோரும் அறிதலுண்மையின்
அதனை விலக்கினார். 136. ஏதம்-துன்பம். அஃதாவது தம்மறை
வெளிப்படின் அதனால் காரியக் கேடுண்டாம் என்பது. கருத்து, பெயர்ந்தும் -
மீண்டும்.
|
|