|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 8. யூகி போதரவு | | 145
பூசுபு புலரா யாக்கையொடு பெயரிய
தோழ ரோடு மிகப்பல
கழறி வேற்றோன் போல
மாற்றம் பெருக்கிப்
படிவப் பள்ளிபயுள் பகலிடங் கழித்துக்
| | 145 - 148; பூசுபு...,..கழித்து
| | (பொழிப்புரை) அவ்விடத்தே
வேற்றுவண்ணங்களைப் பூசிக்கொண்டு அவை உலர்ந்து கெடாத உடலோடே வந்த தன்
தோழரோடு அயலான்போல மிகப்பலவாகப் பேசுமாற்றானே மொழிகளைப் பெருக்கி
அத்தவப்பள்ளியிலேயே அற்றைப் பகற்பொழுதைப் போக்கி என்க,
| | (விளக்கம்) 145.
பூசுபு - பூசி. யாக்கை-உடல்,பெயரிய - வந்த. 147. வேற்றோன் -
ஏதிலன்.மாற்றம் - மொழி,
|
|