|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 8. யூகி போதரவு | | அமரிய நண்பின் தமருளுந் தமராம்
யவனப் பாடி ஆடவர்
தலைமகன் தமனியப்
பைம்பூண் தம்மிறைக் கியன்ற 170 கண்மணி
அன்ன திண்நட் பாளன
| | 167 - 171 அமரிய,.....நட்பாளன்
| | (பொழிப்புரை) விரும்பிய உறவினருள்ளும் சிறந்த உறவினராகிய யவனச்சேரி மறவர் தலைவனும்
பொன்னணிகலன் அணிந்த தம்மரசனுக்குக் கண்ணுள் மணிபோன்ற திண்ணிய
நட்பினையுடையவனும் ஆகிய ஒரு யவனவீரன், தன் கையினாலேயே இயற்றப்பட்ட
மிகவும் நுண்ணிய தொழிற் சிறப்போடு ஞாயிற்றின் தேர் வானத்தில்
இயங்குமளவு வேகத்தோடு நிலத் தின்மேல் இயங்கவல்லதும்,எத்திறத்தோரானும்
உணர்ந்து கொள்ள வியலாத அரிய விசையாணியினையும்,இருப்பிறகுகளையும்
உடையதும் யானை மருப்பாலாய பலகைகளானே பக்கங்கள் அழகு
செய்யப்ட்டதும்.. குதிரை முதலியன பூட்டப் படாமலே இயந்திரத்தாலே
இயங்குவதும், மாட்சிமையுடைய நொழிற்றிறனமைந்ததுமாகியதோர் இயந்திரத்
தேரினை என்க.
| | (விளக்கம்) 167,
அமரிய- விரும்பிய,தம்மை விரும்பிய என்க,தமர் -
சுற்றத்தார் 168. யவனப்பாடி-யவனர்கள் உறையும் தெரு.யவனம்-ஒருநாடு.
ஆடவர்-வீரர் என்பதுபட நின்றது.தலைமகன் -
தலைவன். 169.
பொன்னாலியற்றிய பசிய அணிகலன் அணிந்த தம்மரசனாகிய
உதயணகுமரனுக்கு. கண்மணி - கண்ணினகத்துள்ளதோர் உறுப்பு.
'கருமணியிற்பாவாய்' என வள்ளுவனார் கூறலும் காண்க. உறுப்பினுள் எல்லாம்
சிறந்த கண்மணி நண்பருட்சிறந்த திண்ணட்பாளனாகிய யவனர்
தலைவனுக்கு உவமை. 171. கழி; மிகுதிப்பொருளது.
172. வையகம் - நிலம். வெய்யவன் - ஞாயிறு, 173, தேரின் அன்ன -
தேரை ஒத்த,செலவிற்று. - செலவினையுடைத்து. 174.
யாவரும் என்பது எத்தகையோரும் என்பதுபட நின்றது. 175. இருப்புப்
பத்திரம் - இரும்பாலாய இறகு, 177, பூணி - பூண்டிழுக்கும் எருது குதிரை
முதலியன, பொறியின் - இயந்திரத்தால். 178, வையம் -
தேர்,
|
|