|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 8. யூகி போதரவு | | ________________ மனத்தின்
ஒய்ப்பக் கடுப்புந்
தவிர்ப்புங் கண்டனன் ஆகிப் 180
படைத்துப் பெயர்த்தற்குப் பாடமை
வித்தகர்க். கண்ணினுங்
கையினுந் திண்ணிதின் அடக்கி
எண்ணிய கருமத் தன்றியும்
யூகி சிறைவினை நீக்கி
இறைவினை இரீஇக்
கொடிக்கோ சம்பி புகுத்துதற் கிருந்து 185
கோடித் தன்ன கோடுசால் வையத்து
| | 179 - 185 ; மனத்தின்.,....வையத்து
| | (பொழிப்புரை) தன் மனம்போலச் செலுத்துதற்கு அதன் விரைந்த செலவினையும், அதனை
நிறுத்தற்கும்,தானே பயின்றறிந்தவனாய் அதனைப் பூட்டிப் பிரித்தற்
பொருட்டுப் பெருமை பொருந்திய திறமையுடையாரை அதனகத்தும் புறத்தும்
மறைத்துவைத்து இவ்யூகி என்னும் அமைச்சன் கருதிய செயலான் முடிவுறாத
விடத்தும் உதயணகுமரனைச் சிறையிருப்பினின்றும் வீடுசெய்து அவனது
கோத்தொழிலை அவன்பால் வைத்து அவன் தலைநகரமாகிய கோசம்பி நகரத்தே
செலுத்தக் கருதி நெடுநாள் இருந்து சிந்தித்து இயற்றினாற்போன்ற
அக் குவட்டியினையுடைய தேரின்கண் என்க.
| | (விளக்கம்) (170) நட்பாளன்
தன் கையாலே புனைந்த சிறப்போடு, சிறப்பிற்றாகி, ஆணி
முதலியவற்றையுடையதும் பொறியினியங்குவது மாகியதோர் இயந்திரத்தேரை அதன்
கடுப்புந் தவிர்ப்புங் கண்டவனாய், அதனைப் படைத்தற்கும் பெயர்த்தற்கும்
வித்தகரை அதன் அகத்தும் பக்கத்தும் மறைவாக வைத்து உதயணனைச் சிறை வீடு
செய்து இரீஇக்கோசம்பியிற் புகுத்துதற்கென்று இருந்து கோடித்தாற்
போன்ற அத்தேரின்கண் என இயைபு காண்க 178. ஒய்ப்ப -
செலுத்த. 179. கடுப்பு - விரையச் செலுத்துதல் தவிர்ப்பு -
நிறுத்துதல்'' 180. படைத்தல் - இயந்திரத்தைக் கோத்தல்.
பெயர்த்தல்- பிரித்தல். படைத்துப். பெயர்த்தற் பொருட்டு
அத்தொழிற்றிறமுடையாரை அடக்கி என்க. அடக்கி -
மறைத்துவைத்து, 181. கண் - இடம்; உள்ளிடம் என்க, கை -
பக்கம். 182. யூகி எண்ணிய கருமத் தன்றியும் என
மாறுக 184. இருந்து - நெடுநாள் இருந்து
சிந்தித்தென்க, 185. கோடித்தல் - இயற்றுதல்.கோடு - குவடு.
|
|