|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 9. யூகி சாக்காடு | | விலக்குநர்க்
காணாது நாவாய்
கவிழ்த்த நாய்கன்
போல ஓவா அவலமொடு
காவலன் கலங்கிப்
பண்ணமை நல்லியாழ் இன்னிசைக்
கொளீஇஅதன்
கண்ணயற் கடாத்துக் களிப்பியல் தெருட்டின் 50
ஆழித் தடக்கை அற்றம்
இல்லென வருமொழிக்
கட்டுரை முகமன்
கூறிநம் பெருமகன்
தன்னுழைப் பிரச்சோ
தனனிம் மன்னுயிர்
உற்ற நடுக்க
நீக்குதல் இன்இயல்
மான்தேர் ஏயற் கியல்பென
| | 45-54; விலக்குநர்..................இயல்பென
| | (பொழிப்புரை) அந்நகரத்துக்
காவலனாகிய பிரச்சோதனன் அவ்வியானையைத் தடுத்துத் தம்மை உய்யக்
கொள்ளு வாரைக் காணப் பெறாமையாலே தன் மரக்கலத்தைக்
கடலிலே கவிழ்த்துவிட்ட நாயகன்போலப் பெரிதும் கலங்கி
ஆழிப்படையுடைய உதயணன் யாழிசையை எழுப்பி அக்களிற்றின் மத மயக்கத்தைத்
தெளிவிப்பின் ஏதமில்லை என்று கருதி நம்வேந்தனாகிய உதயணனுக்கு
அம் மண்னவன் அரிய மொழியாலான இனிய பொருள்
பொதிந்த முகமனுரையோடு இந்நகர மாந்தர் எய்திய நடுக் கத்தைப் போக்குதல்
ஏயர் மகனுக்கே கடமையாகும் என்றும் கூறிவிடுப்ப என்க,
| | (விளக்கம்) 45.விலக்குநர்
- அதனை தடுப்போர். 46. நாவாய் மரக்கலம். கலங்கவிழப் பெற்ற நாயகன்
கலங்குமாறு பெரிதும் கலங்க என்க. 47. ஒவா அவலம்-ஒழியாத துன்பம்.
காவலன்;' பிரச்சோதனன். 48-50. ஆழித்தடக்கை
தெருட்டின் அற்றம் இல்லெனக் கருதி என்க.
48.பண்ணமைந்த நல்ல யாழிடத்தே இனிய இசையை எழுப்பி என்க.
49. கண்அயல் கடாத்துக் களிப்பு - கபோல மதத்தால் உண்டான வெறி
என்க, கண் அயல்-கபோலம் (கன்னம்). கடா அம்-மதம். தெருட்டின் -
தெளியச்செயதால், 50, அற்றம்-சோர்வு.
51, அருமொழிக் கட்டுரை-அரிய சொற்றொடராலாய பொருள் பொதிந்த முகமன்
மொழியோடு என்க. 52. நம் பெருமகன் என்றது,
உதயணகுமரனை, 53, நடுக்கம் - ஈண்டுத் துன்பம்,
54. ஏயற்கு - ஏயர்குலத் தோன்றலாகிய நினக்கு.
|
|