| உரை | 
|  | 
| 2. இலாவாண காண்டம் | 
|  | 
| 9. யூகி சாக்காடு | 
|  | 
| தன்னுரை ஒழித்து நுண்வினை அமைச்சனைப் பெயர்ந்த காலைப் பெருமகற் 
      கிப்பால்
 உயர்ந்த 
      கானத் துற்றதுண் 
      டெனினதூஉஞ்
 சின்மொழி மாதரைச் சேர்ந்ததற் கொண்டு
 125    
      நிலையது நீர்மையுந் தலையது தன்மையும்
 உள்விரித் துரையென ஊகி கேட்ப
 | 
|  | 
| 121 - 126 ; தன்னுரை.......................கேட்ப | 
|  | 
| (பொழிப்புரை)   முற்கூறியபடி 
      நிகழ்ந்தவற்றையெல்லாம் இடபகனுக்கு கூறி முடித்த பின்னர், யூகி இடபகனை 
      நோக்கி நம் மன்னன் உச்சைனியினின்றும் புறப்பட்ட பின்னர் 
      அவன் சென்ற நெடிய காட்டுவழியிலே நிகழ்ந்த சிறப்பு நிகழ்ச்சி ஏதேனும் 
      உண்டாயின் அதனையும், அவன் வாசவதத்தையை  எய்திய நாள் தொடங்கி 
      அவன் எய்திய நிலைமையினையும்,  அவனது தலைமைத் தன்மை
      யினையும், விரிவாக எனக்குக் கூறுக என்று வேண்ட என்க. | 
|  | 
| (விளக்கம்)  101. யூகி தான் 
      கூறுதலை விடுத்து என்க. நுண்வினை அமைச்சன் என்றது இடபகனை. நுண்ணுதாக 
      ஆராய்தற்குறிய தொழிலுடையனாதலின் நுண்வினை அமைச்சன் 
      என்றார். 122. பெருமகனுக்குப் பெயர்ந்தகாலைக்கு 
      இப்பால் என மாறுக.
 123. காட்டு வழியிடத்தே நிகழ்ந்த
      சிறப்பு நிகழ்ச்சி ஏதேனும்  உண்டெனின் அதனையும் 
      என்க.
 124. 
      சின்மொழி மாதர் ; வாசவதத்தை ; சிலமொழிகளே பேசுமியல்புடையாள் 
      என்பதாம், மாதர் - அழகுடையாள்.
 125. தலையது தன்மை - தலைமைத் 
      தன்மை; தனது இறைத் தொழிலிலே அவன் இருக்கும் நிலைமை என்க.
 126. உள்விரித்துரை - விளக்கமாக விரித்துக் கூறுக.
 |