உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
9. யூகி சாக்காடு |
|
அடலரும் பல்படை இடபகன்
உரைக்கும் அழகமை
மடப்பிடி ஐந்நூ றோடி
அழனிலை அத்தத் தசைந்துயிர் வைப்பத் 130
தடம்பெருங்க ண்ணியொடு நடந்தனர்
போந்து கடும்பகல்
கழிதுணைக் காட்டகத் தொடுங்கி
வெங்கதிர் வீழ்ந்த தண்கதிர்
மாலை வயந்தகன் என்பால்
வரீஇய போதரத்
தயங்குமலர்த் தாரோன் தனியன் ஆகி 135 மாலை
யாமங் கழிந்த காலை
|
|
127 - 135 ;
அடலரும்...................கழிந்தகாலை
|
|
(பொழிப்புரை) இடபகன் பின்வருமாறு
கூறுகின்றான்; நம் மன்னன் எறி நடத்திய அப்பத்திராவதி என்னும்
பிடியானை ஐந்நூறு காவதம் ஓடிப்பின்னர் வெப்பம் நிலைகொண்ட
பாலை நில வழியிலே இளைத்து வீழ்ந்து மடிந்ததாக ; அதன் பின்னர்
அவ் உதயணன் வாசவதத்தையோடு நடந்து சென்று கடிய அப் பகற்
பொழுது கழியுமளவும் காட்டினூடே மரநிழலிற்றங்கியிருப்ப ஞாயிறுபட்டுத்
திங்கள் மண்டிலம் தோன்றிய மாலைப்பொழு திலே அவரோடிருந்த
வயந்தகன் என்னிடம் வருதற் பொருட்டு அவரைவிடுத்து வந்தானாக. இங்ஙனம்
உதயணன் தனியனாக அம்மாலைப் பொழுது கழிந்த பின்னர் என்க
|
|
(விளக்கம்) 127. பகைவரானே
வெல்லுதற்கரிய பலவாகிய படைகளை உடைய அவ்விடபகன்
என்க. 128. அழகும் இளமையுமுடைய அப்பத்திராபதி என்னும்
பிடிஎன்க. 129. ஐந்நூறு - ஐந்நூறு காவதம், ஐந்நூறு என்றது
காவதங்களின் மிகுதிக்கோர் எல்லை கூறியவாறு. ' ஆயிரத்
தொன்றாம் புலவர்' என்றாற்போன்று, 129. வெப்பம்
நிலைபெற்ற பாலைநிலவழி என்க. அசைந்து -இளைத்து. உயிர்வைப்ப - உயிர்விட
; இறப்ப. 130, கண்ணி ; வாசவதத்தை (124) தாரோனும்
கண்ணியும் ஏனையோரும் நடந்து போந்து என்க. வாசவதத்தை
நடத்தலருமை தோன்ற அவளையே விதந்து கூறினர். நடந்தனர் ;
முற்றெச்சம். 131. கடும்பகல் - வெப்பத்தாலே கடிதாகிய
பகற்பொழுதென்க. கழிதுணை- நீங்குமளவும். 132. வெங்கதிர் - ஞாயிறு,
தண்கதிர்- திங்கள். திங்கள்தோன்றிய மாலை என்க.
1. தனி்யனாக என்று செயவெனெச்சமாக்குக.
|