|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 9. யூகி சாக்காடு | | ஒட்டிய தோழற்
குற்றதை அறியான் பகையடு
தறுகண் இமையகன்று பிறழ
உரைபெயர்த்துக் கொடாஅன் யூகி மாழ்க
வரைபுரை மார்பனை வாங்குபு தழீஇக் 155
கதுமென உரைத்தது கவன்றனன் ஆகி
எதிர்மலர்க் குவளை
இடுநீர்சொரிந்து சீதச்
சந்தனந் தாதோ டப்ப ஏஎல்
பெற்றெழுந் திருந்தனன் உரைக்கென
| | 151 - 158 ; ஓட்டிய....,உரைக்கென
| | (பொழிப்புரை) கேட்டிருந்த யூகி
மேலே தன் நண்பனுக்கு, எய்தியது அறியாதவனாய்த் தன் இமைகள் அகன்று,
கண்கள் பிறழா நிற்பச் -சொல்லவிந்து மயங்கி வீழ்ந்
தானாக அங்ஙனம் வீழ்ந்தவனை, இடபகன் தன். மார் போடணைத்துத்.
தழுவிக் கொண்டு அச் செய்தியை . ஆற்றிக் கூறாமல் ஞெரேலெனக் கூறிவிட்ட
தனது பிழைப் பிற்குத் தானே வருந்திக் குவளைமலர் இட்டு. வைத்த
குளிர்ந்த நீரை அவன் மெய்யிற்றெளித்துக் குளிர்ந்த சந்தனம்
மலர்த்தாது முதலியவற்றைப் பூசுதலானே அவன் மூர்ச்சை தெளிந்து
எழுந் திருந்து நண்ப! மேலே உதயணனுக்கு கெய்தியதியாது கூறுக!
என்று வேண்ட என்க.
| | (விளக்கம்) 151.
ஒட்டிய-நெருங்கிய. தோழன் உதயணன்-உற்றது - பின்னர்
நேர்ந்தது. 152. பகைவரைக் கொல்லுதற்குக் காரணமான
தறுகண்மை யையுடைய தன் கண்ணிமைகள் என்க. 153,
மீண்டும் பேசமாட்டாதவனாய் மயங்க. 154. மார்பனை அந்த யூகியை.
வாங்குபு-தூக்கி எடுத்து. தழீஇ - தழுவிக்கொண்டு.
155. கதுமென-ஞெரேலென, ஒருவர்க்கு ஒரு துன்பச்செய்தி்யைக் கூறத்
தொடங்குவோர் சட்டெனக் கூறிவிட்டால் அத் துன்பத்தின் பொறையினைக்
கேட்.போர் ஆற்றாது மயங்கி வீழ்வர் ; ஆதலான் அச்செய்தியை மறைத்து
மறைத்து மெல்லக் கூறுதல் வேண்டும் ; அங்ஙனம் கூறாமைக்கு இடபகன் தானே
வருந்தினன் என்பதாம். 156. பருவத்தை எதிர்ந்த குவளைமலர்
என்க. நாள்மலர் என்பதாம்.
நீர்,மணமும் குளிர்ச்சியும் எய்துதற்
பொருட்டுக் குவளை மலரிடப் பட்டது என்பதாம்.
157, சீதம்-குளிர்ச்சி. தாது-மகரந்தம். 158, ஏவல்;
இயல் என்பதன் மரூஉ- மீண்டும் தன்னியல் பெய்தி என்றவாறு. ஏஎல் -
மனவெழுச்சி என்பர் நச்சினார்க்கினியர் (சீவக.302 ),
எழுந்திருந்தனன்; ஒருசொல்; முத்றெச்சம். உரைக்கென-மேலே கூறுக
என்று வேண்ட.
|
|