|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 9. யூகி சாக்காடு | | 190 தன்னுயிர் அன்ன தம்பியர்
நினையான் இன்னுயிர்
இடுக்கண் இன்னதென் றறியான்
அவையுங் கரணமும் அவைவகுத் திருவான்
அந்தி மந்திரத் தருநெறி
ஒரீஇத் தந்தையொ
டொறுக்கப் படாஅன் சிந்தை
195 அகனுணர் வில்லா மகனே
போலத் தன்மனம் பிறந்த
ஒழுக்கின னாகிப்
பொன்னகர் தழீஇய புதுக்கோப் போலச்
செவ்வியுங் கொடாஅன் இவ்வியல்
புரிந்தனன் அண்ணல்
ஆதலின் அசைவிலன் என்னத் 200 தன்னமர்
தோழன் பன்னினன் உரைப்ப
| | 190 - 200; தன்னுயிர்..............உரைப்ப
| | (பொழிப்புரை) தன் உயிர்
போன்ற தம்பியர்களையும் நினை யாதவனாய், உலகிலுள்ள உயிர்க்கு
உறுந்துன்பம் இத்தகை யது என்று உணராதவனாய், அவையோரைக் கூட்டுதலும்
கருவி ஆராய்தலுமாகிய அவ்வரசகாரியங்களை வகுத்துக்
கொள்ளாதவனாய் முப்பொழுதினாம் மந்திரத்தாலே இயற்றும் கடமைகளையும்.
விட்டுத் தன் தந்தையாலே தண்டித்துத் திருத்தப் படாதவனும் தானே
சிந்திக்கும் உணர்ச்சியும் இல்லாதவனுமாகிய ஒரு பேதை மகன் போன்று தன்
மனம்போல ஒழுகும் ஒழுக்க முடையவனாய் வானுலகத்தை எய்திய நகுட மன்னன்
போலப் பிறர்க்குச் செவ்வியுங் கொடாதவனாய் இத்தன்மை எய்தினன்
அவன் தான் நம்மனேர்க்குத் தலைவன் ஆகலின அவன் பொருட்டு
யான் செயலற்ற நிலைமையுடையேனாயினேன் என்று தன் தோழனாகிய யூகிக்கு
விரித்துக் கூற என்க,
| | (விளக்கம்) 190.
தன்னுயிரன்ன தம்பியர் - பிங்கல கடகர். தம்பியரையும் எனற்பால
சிறப்பும்மையும் இரண்டனுருபும் செய்யுள் விகாரத்தால்
தொக்கன. 191- உலகிலுள்ள உயிர்களின் துன்பங்களை
ஆராய்ந்தறிந்து அத்துன்பம் போக்குதல் அரசன் கடமையாகவும், அதனையும்
செய்யான் என்பான் உயிர் இடுக்கண் இன்னது என்றறியான்
என்றான், 192, அவை - அரசவை. கருவி-இறைத்தொழிற்கு வேண்டிய
கருவி கள். அவையும் கரணமுமாகிய அவற்றைக் கூறுபடுத்தி இருத்து வானல்லன்
என்க. 193, காலை நண்பகல் மாலை என்னும்
முக்காலத்தும் மந்திர மோதிச் செயயும் நியமங்களையும் விட்டு என்க.
ஒரீஇ-நீங்கி. 194 -195. தந்தையால் என்க -தானே சிந்தை
செய்யும் அகவுணர்வு
என்க 196, தன் மனம் பிறந்த ஒழுக்கினன்-தன்
மனம் போனவாறு ஒழுகும் ஒழுக்கமுடையவன். 197,
பொன்னகர் தழீஇய புதுக்கோ - நகுடமன்னன், இவன் கழிகாமத்தாற் சாப
மெய்திக் கெட்டவன். அவன்போன்று கழிகாமமுடையன் ஆயினன் உதயணன் என்பது
கருத்து, சவ்வி - பிறர், தன்னோடு அளவளாவுதற்குரிய
அமயம். 199, அசைவிலன் ; தன்மை ஒருமை. யான் அவன் பொருட்டு
யாதும் செய்ய வியலாதேன் ஆயினேன் என்பது கருத்து.
|
|