|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 9. யூகி சாக்காடு | | உருமண் ணுவாவொடு வயந்தக குமரனைக்
கருமக் கிடக்கை காண்வரக்
காட்டி இன்னுழி வருகென
அன்னவை பிறவும்
ஒருபொருள் ஒழியா தவளொடுஞ் சூழ்ந்து
| | 246 - 249 ; உருமண்ணுவா..,,,,,,சூழ்ந்து
| | (பொழிப்புரை) பின்னர்
உருமண்ணுவாவும் வயந்தக குமரனுமாகிய அமைச்சர்க்கும் தான் செய்யக்கருதிய
செயன் முறைகளைத் தெளியும்படி கூறுமின் என்றும் நீவிர் இன்ன
விடத்தே வந்து என்னைக் காண்மின் என்றும் கூறி அத்தகைய
பிறசெய்திகளையும், அச் சாங்கியத்தாயோடே ஒன்றும் விடாதபடி ஆராய்ந்து
என்க.
| | (விளக்கம்) 247
கருமக்கிடக்கை - இன்னது செய்தபின்னர் இன்னது செய்தல் வேண்டும் என
நெஞ்சத்துள்ளே முறைப் படுத்தப்பட்டுக் கிடந்த .கிடக்கை எனக,
காண்வர-விளங்கும்படி. 248. இன்னுழி-இன்ன இடத்தில், 249
அவளொடு- அச் சாங்கியத்தாயோடு,
|
|