உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
10 . யூகிக்கு விலாவித்தது |
|
மன்னவன்
மகனே மாதரொடு போந்து
நின்னகர்ப் புகுந்த பின்னர்க்
கண்டனென் என்னா
கியர்மற் றென்வயின்
இனியென
முகமற் கிளவி தகுவ
கூறி 15 ஆடியல் யானை அவந்திய
னகர்வயின் பாடி
மாற்றமொடு பட்டதை உரைத்தபின்
முனிமூ தாட்டியை முகனமர்ந்து
நோக்கி இனியவர்
பெருங்கடம் இயல்பின் தீர்த்த
யூகி நும்மொடு போந்தில னோவெனப
|
|
11-19; மன்னவன்
மகனே.......போந்திலனோவென
|
|
(பொழிப்புரை) வேந்தன் மதலாய்
! நீ வாசவதத்தையோடே புறப்பட்டு நினது நகரத்திற் புகுந்த பின்னர்
- இன்று, நின்னைக்காணும் பேறு பெற்றேன் காண் ! இனி இதனினுங் காட்டில்
யான் பெறக் கடவ சிறந்த பேறு வேறு யாதுளது ! என்று தகுந்த முகமன் மொழிந்து
பிரச்சோதனன் நகரிடத்தே நீர் விழாவிற்கமைந்திருந்த பாடியிலுள்ளோர்
உதயணன் வாசவதத்தையோடு புறப்பட்ட பின்னர்க் கூறிய மொழிகளோடே
ஆண்டு நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் உதயணனுக்குக் கூறிய பின்னர்
உதயணகுமரன் அத்தவமூதாட்டியை முகமலர்ந்து விரும்பி இனிது நோக்கி, நண்பர்
செய்யக்கடவ பெரிய கடமையை நன்கு செய்து முடித்த யூகி நும்மோடு வந்திலனோ
? என்று வினவாநிற்ப என்க.
|
|
(விளக்கம்) 11. மாதர் ;
வாசவதத்தை. 13. என்னாகியர் - யாது ஆகல்வேண்டும்.
ஒன்றுமில்லை என்றவாறு. என்வயின் - என்பால்.
14, முகமற் கிளவி - முகமன்மொழி. தகுவ; பலவறிசொல், 15 -
16. அசையும் இயல்பினையுடைய யானையினையுடைய அவந்தி நாட்டு மன்னனாகிய
பிரச்சோதனனுடைய உச்சைனியின் கண் என்க. 16. பாடி -
படவீடு,மாற்றம் - மொழி. பட்டது - நிகழ்ந்த நிகழ்ச்சி.
17, முனிமூதாட்டி-
தவமூதாட்டி;சாங்கியத்தாய். 18. இனியவர் - நண்பர்.
அவர்க்குரிய பெருங்கடன் ஆவது உற்றுழி விரைந்துதவுதல்.
இதனை, 'உடுக்கை இழந்தவன் கைபோல வாங்கே
இடுக்கண் களைவதா
நட்பு' (குறள்,788) என்றற்
றொடக்கத்துத் திருக்குறள்களானும் உணர்க. தன்னைச் சிறைவீடு செய்த
செயலையுணர்ந்து இனியவர் பெருங்கடன் இயல்பிற்றீர்ந்த யூகி
என்க.
|